சிங்கப்பூர் பாஸ்போர்ட்டுக்கு மிக அதிக மதிப்பு!

(photo: mothership)

உலகிலேயே சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய இரு நாடுகளின் பாஸ்போர்ட்களும் மிக அதிக மதிப்புடையது என்று உலகக்குறியீடு ஒன்று குறிப்பிட்டுள்ளது. இவ்விரு நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசா இல்லாமலேயே 192 வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளலாம். மேலும், இந்த இருநாடுகளும் பட்டியலில் முதல் இடத்தில உள்ளன.

வெளிநாட்டு ஊழியர் விடுதி உட்பட 2 குழுமங்கள் கண்காணிப்பில்… விடுதியில் மொத்தம் 237 பாதிப்புகள் பதிவு

முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் ஜப்பான் பாஸ்போர்ட்டுக்கு அடுத்தப்படியாக சிங்கப்பூர் பாஸ்போர்ட் இடம் பெற்றது. அதன்படி, ஜப்பான் பாஸ்போர்ட்டை வைத்திருக்கும் ஒருவர் 193 வெளிநாடுகளுக்கு விசா இல்லாமல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடியும். அதேபோல், சிங்கப்பூர் பாஸ்போர்ட்டை வைத்திருப்போர் 192 வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிந்தது.

சமீபத்திய புதுப்பித்தலின் படி, இரண்டாம் இடத்தில உள்ள தென்கொரியாவும், ஜெர்மனியும் 190 நாடுகளுக்கு விசாயின்றிப் பயணிக்க முடியும். பின்லாந்து, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் மூன்றாம் இடத்தில் உள்ளன. இந்த நாடுகள் 189 நாடுகளுக்கு விசாயின்றி பயணம் மேற்கொள்ள முடியும். ஆஸ்திரியா மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் நான்காவது இடத்தில் உள்ளன. இந்த நாடுகள் 188 நாடுகளுக்கு விசாயின்றி பயணம் மேற்கொள்ள முடியும்.

12 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் சிங்கப்பூர் வரலாம்!

எகிப்து 97 வது இடத்தில் உள்ளது. அந்த நாட்டு குடிமக்கள் 51 நாடுகளுக்கு விசாயின்றிப் பயணம் மேற்கொள்ளலாம். கென்யா 77- வது இடத்தில் உள்ளது. இந்த நாட்டுமக்கள் பாஸ்போர்ட் மூலம் 72 நாடுகளுக்கு விசாயின்றிப் பயணம் மேற்கொள்ள முடியும்.

ஆண்டு முழுவதும் புதுப்பிக்கப்பட்ட இந்த குறியீட்டை ‘ஹென்லி அண்ட் பார்ட்னர்ஸ்’ வெளியிட்டு வருகிறது. பாஸ்போர்ட் அதிகாரத்தை தங்கள் உரிமையாளர்கள் எத்தனை இடங்களுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும் என்பதைப் பொறுத்து தரவரிசைப்படுத்துகிறது.