கம்போடியாவில் நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக மாணவிகள்!

Photo: Angkor tamil Sangam Siem reap Cambodia Official Facebook Page

கம்போடியா நாட்டில் நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவிகள் பங்கேற்றனர்.

இன்னும் பயங்கரமா இருக்கும்! – மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த சிங்கப்பூர் நாணய ஆணையம்

கம்போடியா நாட்டின் சியாம் ரீப் நகரத்தில் (Siem Reap) அங்கோர் தமிழ் சங்கம் மற்றும் கம்போடியா நாட்டின் கலை மற்றும் பண்பாட்டுத் துறை சார்பில் சர்வதேச பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தமிழகத்தின் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பரதாலயம் என்ற நடனப் பள்ளியின் மாணவிகள், அங்கோர் வாட்டின் 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘பிரசாத் பாய்’ சிவன் கோயில் நடனத்தை அரங்கேற்றம் செய்தனர்.

Photo: Angkor tamil Sangam Siem reap Cambodia Official Facebook Page

ஆஸ்திரேலிய விமானப்படையுடன் பயிற்சி மேற்கொண்ட சிங்கப்பூர் விமானப்படை! – அமெரிக்க நிறுவனம் உருவாக்கிய நவீன போர் விமானம்

தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்ச்சியில், அங்கோர் தமிழ் சங்கத் தலைவர் சீனிவாச ராவ், பரதநாட்டிய ஆசிரியர்கள் உள்ளிட்டப் பலரும் கலந்துக் கொண்டனர். பரதநாட்டிய அரங்கேற்றத்தில் பங்கேற்ற அனைவருக்கும் கம்போடிய அரசின் கலை மற்றும் பண்பாட்டுத் துறை இயக்குனர் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.