ஆட்குறைப்பு நடவடிக்கையில் பிரபல மதுபானத் தயாரிப்பு நிறுவனம்….அதிர்ச்சியில் ஊழியர்கள்!

ஆட்குறைப்பு நடவடிக்கையில் பிரபல மதுபானத் தயாரிப்பு நிறுவனம்....அதிர்ச்சியில் ஊழியர்கள்!
Photo: Asia Pacific Breweries (Singapore) Pte Ltd

 

சிங்கப்பூரில் உள்ள ஜலான் அஹ்மத் இப்ராஹிம் சாலையில் (459 Jalan Ahmad Ibrahim) அமைந்துள்ளது ‘Asia Pacific Breweries (Singapore) Pte Ltd’ என்ற மதுபான உற்பத்தி நிறுவனம். இந்த நிறுவனம் பல்வேறு மதுபானங்களை தயாரித்து உள்ளூரிலும், வெளியூரிலும் விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தில் தயாரிக்கப்படும் ‘Tiger Beer’ என்ற வகை மதுபானம், சிங்கப்பூரில் பிரபலமானது.

பெரிய மரத்துண்டுடன் கவிழ்ந்த லாரி.. பேருந்தில் மோதி விபத்து – பதறிய ஊழியர்கள்.. மூவர் காயம்

சிங்கப்பூரில் உள்ள மதுபானங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் ‘Asia Pacific Breweries (Singapore) Pte Ltd’ நிறுவனம், மறுகட்டமைப்புத் திட்டத்தின் கீழ் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. ஏறத்தாழ ஆலையில் பணிபுரியும் 33 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ள நிறுவனம், டிசம்பர் 31- ஆம் தேதி வேலைக்கான இறுதி நாள் என்று குறிப்பிட்டுள்ளது.

இரண்டடுக்கு பேருந்தின் கீழே சொருகிய மோட்டார் சைக்கிள்.. ஓட்டுநர் மருத்துவனையில்

சிங்கப்பூரில் பிரபல நிறுவனத்தின் அறிவிப்பால், அந்நிறுவனத்தில் பணிபுரிந்து சக ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.