ஆசியான் மனித உரிமைகள் ஆணையத்தின் சிங்கப்பூரின் பிரதிநிதியாக டாக்டர் சஷி ஜெயக்குமார் மீண்டும் நியமனம்!

Photo: National University of Singapore

ஆசியான் மனித உரிமைகள் ஆணையத்தின் சிங்கப்பூரின் பிரதிநிதியாக டாக்டர் சஷி ஜெயக்குமாரை மீண்டும் நியமித்து சிங்கப்பூர் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

தடுப்பூசியின் அடிப்படையில் இறப்புகளின் விகிதம் வேறுபாடு

இது தொடர்பாக, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று (10/01/2022) வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், ஆசியான் மனித உரிமைகள் ஆணையத்தின் (ASEAN Intergovernmental Commission on Human Rights- ‘AICHR’) சிங்கப்பூரின் பிரதிநிதியாக டாக்டர் சஷி ஜெயக்குமாரை சிங்கப்பூர் அரசாங்கம் இரண்டாவது முறையாக மீண்டும் நியமித்துள்ளது. அதன்படி, நடப்பாண்டு ஜனவரி 1- ஆம் தேதி முதல் 2024- ஆம் ஆண்டு டிசம்பர் 31- ஆம் தேதி வரை பதவியில் இருப்பார்.

அதேபோல், ஆசியான் மனித உரிமைகள் ஆணையத்தின் சிங்கப்பூரின் மாற்று பிரதிநிதியாக இணைப் பேராசிரியர் யூஜின் டான் (Associate Professor Eugene Tan) இரண்டாவது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிங்கப்பூரில் S$8.6 மில்லியன் ஜாக்பாட் பரிசு: Singapore Pools லாட்டரி கடைகளில் நீண்ட வரிசை!

‘AICHR’ என்பது ஆசியான் சாசனத்தின்படி நிறுவப்பட்ட ஆசியானின் ஒரு பகுதி ஆகும், இது மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும் ஒட்டுமொத்த பொறுப்பைக் கொண்ட ஆசியானில் உள்ள மனித உரிமைகள் அமைப்பாகும். ‘AICHR’ அதன் குறிப்பு விதிமுறைகளுக்கு ஏற்ப, ஆசியான் மனித உரிமைகள் பிரகடனத்தை உருவாக்கியது. இது கடந்த 2012- ஆம் ஆண்டு நவம்பரில் புனோம் பென்னில் (Phnom Penh) நடந்த 21- வது ஆசியான் உச்சி மாநாட்டில் ஆசியான் தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சிங்கப்பூரின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் சஷி ஜெயக்குமாரின் பின்னணி குறித்து விரிவகப் பார்ப்போம்!

டாக்டர் சஷி ஜெயக்குமார் தற்போது தேசிய பாதுகாப்புக்கான சிறப்பு மையத்தின் ( Head of the Centre of Excellence for National Security- ‘CENS’) தலைவராகவும், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (Nanyang Technological University) எஸ். ராஜரத்தினம் சர்வதேச ஆய்வுப் பள்ளியில் (S. Rajaratnam School of International Studies- ‘RSIS’) எதிர்கால சிக்கல்கள் மற்றும் தொழில்நுட்பத்திற்கான நிர்வாக ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். அவர் 2002- ஆம் ஆண்டு முதல் 2017- ஆம் ஆண்டு வரை சிங்கப்பூர் நிர்வாகச் சேவையின் உறுப்பினராகவும், 2011- ஆம் ஆண்டு முதல் 2014- ஆம் ஆண்டு வரை லீ குவான் யூ ஸ்கூல் ஆஃப் (Lee Kuan Yew School of Public Policy) பொது கொள்கைப் பள்ளியில் மூத்த வருகை ஆய்வாளராகவும் இருந்தார்.

கட்டுப்பாடுகளை நீக்கவும் முடியாது… ‘Zero-Covid’ திட்டத்திற்கு செல்லவும் முடியாது – சிங்கப்பூர்

சிங்கப்பூரின் மாற்று பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள இணைப் பேராசிரியர் யூஜின் டான் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

யூஜின் டான் சிங்கப்பூர் மேலாண்மைப் பல்கலைக்கழகத்தில் (Singapore Management University- ‘SMU’) யோங் பங் ஹவ் ஸ்கூல் ஆஃப் லாவில் சட்டப் பேராசிரியராக (Associate Professor of Law at the Yong Pung How School of Law) உள்ளார். அவர் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (National University of Singapore), லண்டன் பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியல் பள்ளி (London School of Economics and Political Science) மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் (Stanford University) கல்வி பயின்றார், யூஜின் டான் 2012- ஆம் ஆண்டு முதல் 2014- ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரின் 12- வது நாடாளுமன்றத்தில் நியமன உறுப்பினராகப் பணியாற்றினார்.

இவ்வாறு வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.