தடுப்பூசியின் அடிப்படையில் இறப்புகளின் விகிதம் வேறுபாடு

Pic: Mohd RASFAN/AFP

தடுப்பூசியின் அடிப்படையில் இறப்புகளின் நிகழ்வு விகிதம் வேறுபட்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் ஓங் யே குங் தெரிவித்துள்ளார்.

முழுமையாக தடுப்பூசி போடாதவர்களில் 100,000 பேருக்கு 79 பேர் இறந்துள்ளனர்.

இந்திய ஊழியருக்கு அடித்த லாட்டரி: இந்திய மதிப்பில் “500 மில்லியன்” – ஓட்டுநர், கோடீஸ்வரர் ஆன மகிழ்ச்சி!

சினோவாக் தடுப்பூசி போட்டவர்களில் 100,000 பேருக்கு 11 இறப்புகள் பதிவாகியுள்ளது.

அதே போல, சினோபார்ம் போட்டவர்களில் 100,000 பேருக்கு 7.8 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

mRNA தடுப்பூசிகள் போடப்பட்டவர்களைப் பொறுத்தவரை, ஃபைசர்-பயோஎன்டெக் போட்டவர்களில் 100,000க்கு 6.2 ஆகவும், மாடர்னாவுக்கு 100,000க்கு 1 ஆகவும் உள்ளது.

மேலும், இந்த விகிதங்கள், வயது மற்றும் நேரம் போன்ற பிற காரணிகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாததால், இறப்பை மட்டுமே சுட்டிக்காட்டுகின்றன, என்று அவர் கூறினார்.

சிங்கப்பூரில் கடந்த 2021ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 802 பேர் கோவிட் -19 காரணமாக இறந்துள்ளனர், அதில் 555 பேர் முழுமையாக தடுப்பூசி போடாதவர்கள் என்றும் அமைச்சர் இன்று திங்கள்கிழமை (ஜனவரி 10) குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா செல்லும் பயணியா நீங்க? – தொற்று ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலை வெளியிட்டது “இந்தியா”