ஏப்ரல் 17- ஆம் தேதி அன்று ஸ்ரீ சிவன் கோயிலில் பிரதோஷ பூஜை!

Photo: Sri Sivan Temple

சிங்கப்பூரில் உள்ள 24 கெய்லாங் ஈஸ்ட் அவென்யூ-2ல் (24 Geylang East Ave 2) அமைந்துள்ளது ஸ்ரீ சிவன் கோயில் (Sri Sivan Temple). இந்த கோயில் இந்து அறக்கட்டளை வாரியத்தின் (Hindu Endowments Board) கீழ் உள்ளது. இக்கோயிலில் விஷேச நாட்களில் சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுவது வழக்கம். அதேபோல், பிரதோஷம் நாளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றது.

சிங்கப்பூரில் குடியுரிமை பெற இதல்லாம் தேவை.. ஆங்கிலம் முக்கியமா?

அந்த வகையில், வரும் ஏப்ரல் 17- ஆம் தேதி அன்று மாலை ஸ்ரீ சிவன் கோயிலில் பிரதோஷ பூஜை நடைபெறவுள்ளது. அபிஷேகப் பொருட்களுக்கும், வில்வ அர்ச்சனைக்கும் பக்தர்கள் https://sst.org.sg/ என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று பதிவுச் செய்துக் கொள்ளலாம்.

சிங்கப்பூரின் இளம் கால்பந்து வீரர் காலமானார்!

உங்கள் பெயர்களில் கோயில் அர்ச்சகர்கள் அபிஷேகப் பொருட்களும் மற்றும் வில்வ அர்ச்சனையையும் செலுத்தி விடுவார்கள். இந்நாளில் பக்தர்கள் கோயிலில் அமர்ந்து பிரதோஷ பூஜையைப் பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 67434566 என்ற கோயில் அலுவலகத்தின் தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.