குறைந்த வருமானம் உடைய ஒவ்வொரு ஊழியருக்கும் தலா 5 ART சோதனை கருவிகள் இலவசம்

toddler-baby-boy-dies-covid-19-first-death-singapore 2023
Photo: Yahoo India

குறைந்த வருமானம் உடைய ஒவ்வொரு சிங்கப்பூர் குடியிருப்பாளரும் 5 ART சோதனை கருவிகள் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அவற்றை சமூக சேவை அலுவலகங்கள் மற்றும் குடும்ப சேவை நிலையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களை எடுத்தால், சிங்கப்பூர் ஊழியர்களுக்கு S$1,400 சம்பளம் – அனைத்து நிறுவனங்களுக்கும் கட்டாயம்!

குடியிருப்பாளர்கள் பயன்பெறும் வகையில், 24 சமூக சேவை அலுவலகங்கள் மற்றும் 47 குடும்ப சேவை நிலையங்களுக்கும் சுமார் 140,000 ஆன்டிஜென் ரேபிட் டெஸ்ட் (ART) கருவிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

“ART சோதனை கருவிகளை வாங்குவதில் குறைந்த வருமானம் கொண்ட ஊழியர்களின் நிதிச் சுமையைக் குறைக்க இந்த நடவடிக்கை உதவும்.”

அதேபோல, சுயமாக சோதனை செய்வதை ஊக்குவிக்கவும் இது உதவும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யே குங் Facebook பதிவில் தெரிவித்தார்.

தங்கும் விடுதி, கட்டுமான துறையில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஏப்ரல் 1 முதல் இது கட்டாயம்!