ஆசியான்- சீனா சிறப்பு உச்சி மாநாட்டில் சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு!

Photo: Singapore Prime Minister Official Facebook Page

ஆசியான்- சீனா சிறப்பு உச்சி மாநாடு (ASEAN-China Special Summit) இன்று (22/11/2021) காலை காணொளி வாயிலாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் பிலிப்பைன்ஸ், கம்போடியா, இந்தோனேசியா, புரூனே, மியான்மர், தாய்லாந்து, மலேசியா, வியட்நாம், ஆசியான் அமைப்பின் செயலாளர் உள்ளிட்டோர் காணொளி மூலம் பங்கேற்றனர்.

சிங்கப்பூர்- திருச்சி இடையே சிறப்பு விமானத்தை இயக்கிய ‘ஏர் ஏசியா’!

இந்த உச்சி மாநாட்டில், கொரோனா பரவல், கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகள், பொருளாதாரம், மியான்மர் விவகாரம், இறக்குமதி, ஏற்றுமதி, ஆசியான் நாடுகளிடையேயான விமான போக்குவரத்து, தென்கிழக்காசியாவில் நிலவும் சூழல் உள்ளிட்டவைக் குறித்து தலைவர்கள் விரிவாக ஆலோசனை நடத்தியதாக தகவல் கூறுகின்றன.

ஆசியான்- சீனா சிறப்பு உச்சி மாநாடு குறித்து சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “ஆசியான்- சீனா உரையாடல் உறவுகளின் 30 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் இன்று காலை ஆசியான்- சீனா சிறப்பு உச்சி மாநாட்டில் (ASEAN-China Dialogue Relations) சக ஆசியான் தலைவர்கள் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் இணைந்தேன்.

சிங்கப்பூரில் இருந்து மெல்போர்ன் வந்த பயணிகளுக்கு உற்சாக வரவேற்பு!

கொரோனா இருந்த போதிலும், ஆசியானும், சீனாவும் தொடர்ந்து எங்கள் கூட்டாண்மையைப் பலப்படுத்தி வருகின்றன. தொற்றுநோய்க்குப் பிந்தைய மீட்சிக்கு நாம் மாறும்போது, ​​எல்லை தாண்டிய பயணத்தை படிப்படியாகவும், பாதுகாப்பாகவும் மீட்டெடுப்பது குறித்து ஆசியான் மற்றும் சீனா விவாதிப்பது சரியான நேரத்தில். மேலும், ஆசியான்- சீனா FTA- ஐ மேம்படுத்துவது நமது பொருளாதாரத்தை உயர்த்தி, பிராந்தியத்தில் உள்ள நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கலாம்.

சீனாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான சமீபத்திய உயர்மட்ட பரிமாற்றங்கள், பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஊக்கமளிப்பதாக இருந்தது. ஆசியானும், சீனாவும் தொடர்ந்து இணைந்து செயல்பட வேண்டும். ஆசியானும், சீனாவும் நமது ஒத்துழைப்பை ஒரு படி உயர்த்தி, அதை ஒரு விரிவான மூலோபாய கூட்டாண்மையாக மாற்றியுள்ளன. இது அர்த்தமுள்ளதாகவும், பரஸ்பரம் பயனுள்ளதாகவும் இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.