காணொளி வாயிலாக நடந்த ஆசியான் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் அவசர கூட்டம்!

Photo: Minister Vivian Balakrishnan Official Facebook Page

ஆசியான் கூட்டமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் அவசர கூட்டம், அக்டோபர் 15- ஆம் தேதி அன்று இரவு காணொளி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், மலேசியா, புரூணை, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்துக் கொண்டனர்.

சாங்கி விமான நிலையத்தின் அறிவிப்பால் பயணிகளின் குடும்பத்தினர் மகிழ்ச்சி!

இந்த கூட்டத்தில் மியான்மரில் நிலவும் அசாதாரண சூழல், அரசியல் விவகாரம், ராணுவ ஆட்சி உள்ளிட்டவைக் குறித்து அமைச்சர்கள் விரிவாக ஆலோசனை மேற்கொண்டனர்.

இது குறித்து சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “நேற்று முன்தினம் (15/10/2021) இரவு நடந்த அவசர ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில், வரவிருக்கும் ஆசியான் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள மியான்மரில் இருந்து அரசியல் சார்பற்ற பிரதிநிதியை அழைக்க முடிவு செய்தோம். நடப்பாண்டு ஏப்ரல் மாதம் 24- ஆம் தேதி அன்று நடைபெற்ற ஆசியான் தலைவர்கள் சந்திப்பின் போது, ஐந்து முக்கிய அம்சங்கள் ஒருமித்த அமலாக்கத்தில் திருப்தியற்ற மற்றும் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு ஆசியானின் நம்பகத்தன்மையை நிலைநிறுத்துவது கடினமானது. ஆனால் அவசியமான முடிவு ஆகும்.

நிகழ்ச்சிகளை பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே காணும் வகையில் ‘Lisha’ சிறப்பு ஏற்பாடு!

ஆசியான் தலைவர் (ASEAN Chair) மற்றும் மியான்மரில் உள்ள ஆசியான் தலைவரின் சிறப்பு தூதர் (Special Envoy of the ASEAN Chair on Myanmar) என அயராது முயற்சி செய்த எனது சக ஊழியர் டத்தோ எரிவான் பெஹின் யூசப்ஃபை (Dato Erywan Pehin Yusof) நான் பாராட்டுகிறேன். சிறப்பு தூதரின் பணியை சிங்கப்பூர் முழுமையாக ஆதரிக்கிறது. ஐந்து அம்ச ஒருமித்த கருத்தை விரைவாகவும், முழுமையாகவும் செயல்படுத்த மியான்மர் இராணுவ அதிகாரிகளை நாங்கள் வலியுறுத்துகிறோம்”. இவ்வாறு அமைச்சரின் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.