நிகழ்ச்சிகளை பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே காணும் வகையில் ‘Lisha’ சிறப்பு ஏற்பாடு!

Photo: Lisha Official Facebook Page

சிங்கப்பூரில் மிகவும் பிரபலமான பகுதியாக உள்ளது லிட்டில் இந்தியா. இப்பகுதியில் அனைத்து வகையான பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதி எப்போதும் கூட்டங்கள் நிறைந்து பரபரப்பாக காணப்படும். கடை வைத்திருப்பவர்களில் பெரும்பாலானவர் இந்தியர்கள் ஆவர். இங்கு சிங்கப்பூர் மக்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் கடை வீதிகளில் பயணம் மேற்கொண்டு பொருட்களை வாங்கிச் செல்வது வழக்கம் ஆகும்.

‘சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரில் போலி மின்னஞ்சல்’- எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்!

பண்டிகை நாட்களில் லிட்டில் இந்தியா பகுதி முழுவதும் களைக்கட்டும். இதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் தீபாவளி பண்டிகை. லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் இணைந்து ‘Lisha’ (LITTLE INDIA SHOPKEEPERS AND HERITAGE ASSOCIATION) என்ற அமைப்பைத் தொடங்கி, சிங்கப்பூரில் உள்ள ஏழை, எளிய தமிழர் குடும்பங்களுக்கு நிதி உதவி செய்து வருகின்றன. மேலும், ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக, லிட்டில் இந்தியா முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, பல்வேறு நிகழ்ச்சிகள், போட்டிகளை, இந்த அமைப்பு தொடர்ந்து நடத்தி வருகிறது. தீபாவளி பண்டிகை முடிந்த பிறகும், சுமார் ஒரு மாதம் வரை தீபாவளி கொண்டாட்டங்கள் நீடிக்கும்.

அந்த வகையில், நடப்பாண்டில் நவம்பர்- 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகைக் கொண்டாடப்படுவதையொட்டி, பல்வேறு நாள்தோறும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது, அதேபோல், பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் லிட்டில் இந்தியா பகுதி முழுவதும் வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது.

சாங்கி விமான நிலையத்தின் அறிவிப்பால் பயணிகளின் குடும்பத்தினர் மகிழ்ச்சி!

இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் காரணமாக, பொதுமக்கள் வீடுகளில் இருந்த படியே நிகழ்ச்சிகளை நேரலையில் பார்க்கவும், இணைய வழியில் நிகழ்ச்சியில் பங்கேற்கவும் சிறப்பு ஏற்பாடுகளை ‘Lisha’ அமைப்பு செய்துள்ளது. அதன்படி, www.deepavalisg.com/blog/deepavali-from-home என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் நிகழ்ச்சி நிரல் குறித்த விவரங்களை அறிந்துக் கொள்ளலாம். நாள்தோறும் நடைபெறும் நிகழ்ச்சியை ‘Lisha’ வின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் மற்றும் ‘Youtube’- வழியாக நேரலையில் காணலாம்.

இன்றை நிகழ்ச்சியில் வசந்தம் சமையல் கலைஞர் என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற பேகோஸ் தி டைன் ஆஃப் லிட்டில் இந்தியாவின் உரிமையாளர் செஃப் ஆரிஃபின் (Renowned Bacos the Dine of Little India Chef Arifin), சிக்கின பிரியாணி, இனிப்புகள் உள்ளிட்ட உணவுகளை செய்து அசத்தவிருக்கிறார். இந்நிகழ்ச்சியானது இன்று (16/10/2021) மாலை 03.30 மணிக்கு தொடங்கி, மாலை 05.00 மணிக்கு நிறைவுப் பெறுகிறது.