‘சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரில் போலி மின்னஞ்சல்’- எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்!

Man pleads guilty to sharing porn on WhatsApp

சிங்கப்பூர் மிகப்பெரிய விமான நிறுவனமாக திகழ்கிறது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம். சிங்கப்பூர் அரசு, தற்போது கொரோனா தடுப்பூசியை முழுமையாகச் செலுத்திக் கொண்டவர்களுக்கான சிறப்பு பயணத் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி, ஜெர்மனி மற்றும் புரூணை ஆகிய நாடுகளுக்கு ஏற்கனவே சிங்கப்பூரில் இருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் விமான சேவையை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, அரசு அனுமதித்துள்ள அமெரிக்கா, கனடா, பிரிட்டன், நெதர்லாந்து, டென்மார்க், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கும் அதிகளவு விமானங்களை இயக்க தேவையான நடவடிக்கைகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

போலீஸ் அதிரடி சோதனை: சட்டவிரோத குழுவின் உறுப்பினர்களாக சந்தேகிக்கப்படும் 14 பேர் கைது

மேலும், சில நாடுகளுக்கான பயண அட்டவணையை வெளியிட்டுள்ள சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், அதற்கான டிக்கெட் முன்பதிவையும் தொடங்கியுள்ளது. முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே டிக்கெட் முழுவதும் விற்று தீர்ந்துள்ளது. இதனால் வெளிநாட்டு பயணிகள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும், கூடுதல் விமானங்களை இயக்க வேண்டும் என்று விமான நிறுவனத்திற்கு கோரிக்கையும் வைத்துள்ளனர்.

கோவிட்-19 தொற்று: சிங்கப்பூரில் மேலும் எட்டு பேர் உயிரிழப்பு

இந்த நிலையில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் நேற்று (15/10/2021) தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரில் போலி மின்னஞ்சல்கள், போலி குறுஞ்செய்திகள் பொதுமக்கள், பயணிகளுக்கு வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதில், அவர்களின் தனிப்பட்ட தகவல்கள் கோரியதாகவும் கூறப்படுகிறது. எனவே, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரில் இருந்து வரும் போலி மின்னஞ்சல்கள், போலி குறுஞ்செய்திகள், போலி தொலைபேசி அழைப்புகள் குறித்து பயணிகள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதேபோல், அவர்களிடம் தங்களின் தனிப்பட்ட தகவல்களை யாரும் பகிர வேண்டாம்.

சாங்கி விமான நிலையத்தின் அறிவிப்பால் பயணிகளின் குடும்பத்தினர் மகிழ்ச்சி!

அத்தகைய அழைப்புகள், மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகளைப் பெறுபவர்கள், அதனை உண்மையானதா அல்லது போலியானதா என சரிபார்க்க விரும்பினால், http://singaporeair.com/en_UK/feedback-enquiry/ என்ற இணையதளம் மூலம் எங்களுக்கு அனுப்பலாம். பின்னர், நாங்கள் விரைவில் உங்களைத் தொடர்பு கொள்வோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில், கடந்த சில மாதங்களாகவே போலி இணையதளம், போலி மின்னஞ்சல், போலி குறுஞ்செய்தி உள்ளிட்டவையால் மோசடி நபர்களிடம் இருந்து சுமார் பல்லாயிரம் சிங்கப்பூர் டாலரை பொதுமக்கள், தொழிலாளர்கள் இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.