சிங்கப்பூர் மியூசியத்தில் கோயில் சிலைகள்….தகவல் தெரிவிப்போருக்கு ரொக்கப் பரிசு அறிவிப்பு!

சிங்கப்பூர் மியூசியத்தில் கோயில் சிலைகள்....தகவல் தெரிவிப்போருக்கு ரொக்கப் பரிசு அறிவிப்பு!
Photo: Asian Civilisations Museum

 

தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக் கூடுதல் பிரிவு டி.ஜி.பி. சைலேஷ் யாதவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழகத்தில் உள்ள கோயில்களில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால சிலைகள், வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியகங்கள் எனப்படும் மியூசியத்தில் உள்ளதா? என ஆய்வுச் செய்யப்பட்டது. அதில், சிங்கப்பூரில் உள்ள இம்ப்ரெஸ் பிஐ-யில் (1 Empress Pl) அமைந்துள்ள ஏசியன் சிவிலைஷேசன் மியூசியம் கிரீன் (Asian Civilisations Museum) இணையதளத்தில் தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட கோயில் சிலைகள் மற்றும் கலைப்பொருட்கள் விற்பனைக்கு இருப்பதாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ள படங்கள் இடம் பெற்று இருந்தன.

சுமார் 770 ஊழியர்களுக்கு வேலை இல்லை… கலங்கும் ஊழியர்கள் – Singapore Turf Club

இதையடுத்து, சிலைகள் மற்றும் கலைப்பொருட்களை மீட்கும் முயற்சியில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சிலைகள் எந்த கோயிலில் இருந்து கடத்தப்பட்டது?, சிங்கப்பூருக்கு எப்படி கடத்தப்பட்டது? போன்றவைக் குறித்த தகவல்களைச் சேகரித்து வருகிறோம்.

வெளிநாட்டில் உயிரிழந்த கணவரின் உடலை தமிழகத்திற்கு கொண்டு வர ஆட்சியரிடம் மனைவி மனு!

சிங்கப்பூர் மியூசியத்தில் உள்ள சிலைகள் மற்றும் கலைப்பொருட்கள் குறித்து, துல்லியமாக தகவல் தெரிவிப்போருக்கு ரூபாய் 10,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும். இது குறித்து 98401-90505, 94981-31040, 99429- 16632 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புக் கொள்ளலாம். சிலைகள் மற்றும் கலைப்பொருட்கள் குறித்து தகவல் அளிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.