சுமார் 770 ஊழியர்களுக்கு வேலை இல்லை… கலங்கும் ஊழியர்கள் – Singapore Turf Club

turf-club-closure-workers-affected
Images: Gladys Wee

Singapore Turf Club வரும் 2027ஆம் ஆண்டுக்குள் மூடப்படும் என்றும் அந்த இடம் மறுசீரமைப்பு பணிக்காக அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் முன்னர் சொல்லப்பட்டது.

மேலும் அடுத்த ஆண்டு 2024 அக்டோபர் மாதம் முதல் குதிரைப் பந்தயமும் நிறுத்தப்படும் எனவும் கூறப்பட்டது.

ஆணிடம் தவறாக நடந்த இன்னொரு ஆடவர்… கேமரா உதவியுடன் கைது செய்த போலீஸ் – பிரம்படி கிடைக்கலாம்?

இந்த மூடலால் இரண்டு பிரிவு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர் அலுவலக அமைச்சரும், நிதி மற்றும் தேசிய வளர்ச்சிக்கான இரண்டாவது அமைச்சருமான இந்திராணி ராஜா கூறினார்.

ஒரு பிரிவினர் Singapore Turf Club நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்டவர்கள் என்றும், இன்னொரு பிரிவினர் பயிற்சியாளர்களால் பணியமர்த்தப்பட்டவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Singapore Turf Clubபால் பணியமர்த்தப்பட்ட 350 ஊழியர்களும், பயிற்சியாளர்களால் பணியமர்த்தப்பட்ட சுமார் 420 ஊழியர்களும் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அக்டோபர் 2024 வரை குறைந்தது அடுத்த 15 மாதங்களுக்கு Turf Club ஊழியர்கள் தொடர்ந்து பணியில் இருப்பார்கள் என்று இந்திராணி கூறினார்.

சில ஊழியர்கள் 2027 ஆம் ஆண்டு வரை தாக்கு பிடிக்கலாம் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

மனிதவள அமைச்சகத்தின் (MOM) வழிகாட்டுதல் அடிப்படையில், வேலையில் இருந்து தூக்கப்பட்ட ஊழியர்களுக்கு ஆட்குறைப்பு சலுகைகள் வழங்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது.

அவர்களுக்கு வேலை வாய்ப்பு உதவி, வழிகாட்டுதல், திறன் பயிற்சி மற்றும் ஆலோசனைகளும் வழங்கப்படும். இதனால் அவர்கள் புதிய வேலைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று இந்திராணி கூறினார்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

வெளிநாட்டு ஊழியரை மகனாக ஏற்றுக்கொண்ட சிங்கப்பூர் பெண்… ஊழியரின் அளவில்லா பாசத்துக்கு கிடைத்த வெற்றி

“வேலையை விட்டு தூக்க போறோம்..” – செய்தி அறிந்து கண்ணீர் வடித்த ஊழியர்கள்

“ஊழியர்கள் படிப்படியாக வேலையில் இருந்து நீக்கம் செய்யப்படுவர்” – Turf club