வரலாற்று சாதனைப் படைத்த சிங்கப்பூர் வீராங்கனை சாந்தி பெரேரா!

வரலாற்று சாதனைப் படைத்த சிங்கப்பூர் வீராங்கனை சாந்தி பெரேரா!
Photo: President Tharman Shanmugaratnam

 

19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், சீனா நாட்டின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தடகள போட்டியில் பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட சிங்கப்பூர் வீராங்கனை சாந்தி பெரேரா (Shanti Pereira), சுமார் 23.03 வினாடிகளில் இலக்கை அடைந்து முதலிடம் பிடித்து வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.

சிங்கப்பூரில் பலத்த இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – அதே போல வெயிலும் பொளந்து கட்டும்

சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு தடகளப் போட்டியில் சிங்கப்பூர் தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்து நாட்டிற்கு பெருமைச் சேர்த்துள்ளார். தங்க மங்கை சாந்தி பெரேராவுக்கு சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினம், பிரதமர் லீ சியன் லூங், துணை பிரதமரும், நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் உள்ளிட்டோர் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.

கடைசியாக, கடந்த 1974- ஆம் ஆண்டு டெஹ்ரானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில், 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்ட சிங்கப்பூர் வீராங்கனை சீ சுவீ லீ (Chee Swee Lee) தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கங்களைக் குவித்த சிங்கப்பூர் வீரர், வீராங்கனைகள்!

முன்னதாக, நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட சாந்தி பெரேரா, வெள்ளி பதக்கம் வென்றிருந்தார் என்பது நினைவுக் கூறத்தக்கது.