ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நிறைவு- சிங்கப்பூர் எத்தனை பதக்கங்களை வென்றுள்ளது தெரியுமா?

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நிறைவு- சிங்கப்பூர் எத்தனை பதக்கங்களை வென்றுள்ளது தெரியுமா?
Photo: Team Singapore

 

19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீன நாட்டின் ஹாங்சோ நகரில் கடந்த செப்டம்பர் 23- ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கிய நிலையில், அக்டோபர் 08- ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த போட்டிகளில் சுமார் 40- க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 10,000- க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இந்த நாட்டின் பகுதிக்கு பயணிக்க வேண்டாம் – சிங்கப்பூர் அறிவுறுத்தல்

குறிப்பாக, சிங்கப்பூரைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பேட்மிண்டன், வாள்வீச்சு, பாய்மரப்படகு, துடுப்பு படகு, தடகளம், நீச்சல் உள்ளிட்ட போட்டிகளில் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தியதுடன், பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தனர்.

19TH Asian Games

நடந்து முடிந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில், 3 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்களுடன் சிங்கப்பூர் பதக்கப் பட்டியலில் 20வது இடத்தில் உள்ளது.

புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையையொட்டி, ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை!

383 பதக்கங்களுடன் சீனா முதலிடத்திலும், 188 பதக்கங்களுடன் ஜப்பான் இரண்டாவது இடத்திலும், 190 பதக்கங்களுடன் தென் கொரியா மூன்றாவது இடத்திலும், 107 பதக்கங்களுடன் இந்தியா நான்காவது இடத்திலும் பதக்கப பட்டியலில் உள்ளன.