சிங்கப்பூர் அரசு அறிவித்த ‘Assurance Package’- யை பெற்றுவிட்டீர்களா சிங்கப்பூரர்களே?- விரிவான தகவல்!

சிங்கப்பூர் அரசு அறிவித்த 'Assurance Package'- யை பெற்றுவிட்டீர்களா சிங்கப்பூரர்களே?- விரிவான தகவல்!
File Photo

 

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் வாழ்க்கை செலவு அதிகரிப்பு உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு, சிங்கப்பூர் நிதியமைச்சகம் கடந்த நவம்பர் 15- ஆம் தேதி அன்று சிங்கப்பூரர்களுக்கு இரண்டு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்திருந்தது.

புதுப்பொலிவுடன் சாங்கி முனையம் 2 முழுவதும் திறப்பு – 4 மாடி டிஜிட்டல் நீர்வீழ்ச்சி, புதிய தோட்டம் உள்ளிட்டவை வேற லெவல்

அதைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதம் ‘AP Cash Special Payment’ என்ற திட்டத்தையும், நவம்பர் மாதம் ‘AP Cash’ என்ற திட்டத்தையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த இரு திட்டங்களின் மூலம் சிங்கப்பூரர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உதவித் தொகை வழங்கும் திட்டம் வரும் டிசம்பர் 01- ஆம் தேதி தொடங்கியுள்ளது. அதன்படி, வரும் 2024- ஆம் ஆண்டில் 21 வயதை எட்டுப்பவர்கள் மற்றும் அந்த வயதிற்கு மேற்பட்டவர்கள், இந்த மாதத்தில் 200 வெள்ளி முதல் 800 வெள்ளியைப் பெறுவர்.

1,00,000 வெள்ளி அல்லது அதற்கு குறைவாக வருமானம் ஈட்டும் சிங்கப்பூரர்கள், ஒரு சொத்து வைத்திருக்கும் சிங்கப்பூரர்கள் அல்லது சொத்துக்கள் எதுவும் இல்லாத சிங்கப்பூரர்கள் ‘AP Cash Special Payment’ திட்டத்தின் கீழ் வருவார்கள். அவர்களுக்கு 150 வெள்ளி முதல் 200 வெள்ளி வரை வழங்கப்படும்.

ஜாலான் ரெட்ஹிலில் இறந்து கிடந்த ஆடவர் – போலீசார் விசாரணை

அதிக வருமானம் ஈட்டும் சிங்கப்பூரர்கள், அதிக எண்ணிக்கையிலான சொத்துகளை வைத்திருக்கும் சிங்கப்பூரர்கள் ‘AP Cash’ என்ற திட்டத்தின் கீழ் வருவார்கள். அவர்களுக்கு வருமானம் மற்றும் சொத்துக்களின் அடிப்படையில் 200 வெள்ளி, 350 வெள்ளி அல்லது 600 வெள்ளி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவமபர் 19-ஆம் தேதிக்குள் ‘PayNow’ கணக்குடன் NRIC-யை இணைத்தவர்களுக்கு டிசம்பர் 05- ஆம் தேதி முதல் அவர்களது ‘PayNow’ கணக்குகளுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது. சிலர் டிசம்பர் 01- ஆம் தேதிக்கு முன்பாக பணத்தைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, இந்த உதவித்தொகை சிங்கப்பூரர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.