கூர்மையான ஆயுதம் கொண்டு தாக்குதல்… CCTV மூலம் சிக்கிய இளைஞர் – அதிரடியாக கைது செய்த போலீஸ்

File Photo : Singapore Police

கூர்மையான ஆயுதம் கொண்டு ஒருவரைத் தாக்கியதாக சந்தேகிக்கப்படும் 21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த இளைஞர் கத்தரிக்கோல் கொண்டு தாக்கியதாக சிங்கப்பூர் காவல் படை (SPF) தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 8.29 மணியளவில் செராங்கூன் அவென்யூ 4ல் இந்த தாக்குதல் குறித்து புகார் வந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.

சிங்கப்பூரில் மெல்ல மெல்ல உயரும் குரங்கம்மை பாதிப்பு

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 20 வயதுமிக்க மற்றொரு இளைஞர் பல காயங்களுக்கு உள்ளாகி, சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இளைஞர், போலீசார் வருவதற்கு முன்னர் 21 வயதுடைய பெண் ஒருவருடன் வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார்.

எனினும், கேமராக்களின் உதவியுடன் அவரது அடையாளம் விரைவாக கண்டறியப்பட்டு, அவர்கள் பொங்கோல் 17வது அவென்யூ அருகில் இருந்த ஒரு லாரிக்குப் பின்னால் மறைந்து இருந்ததை போலீசார் கண்டறிந்தனர்.

தாக்குதல் நடத்தப்பட்ட ஐந்து மணி நேரத்திற்குள் சந்தேக நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

அவருடன் இருந்த பெண்ணுக்கு பல காயங்கள் ஏற்பட்டு இருந்ததாகவும், அவர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் இளைஞர்கள் பாலுறவில் சுறுசுறுப்பாக இருக்கிறார்களா? – உடலுறவு குறித்த தவறான புரிதல்கள் அபாயமானது