முகக்கவசம் அணியச் சொன்னது குத்தமா? – பேருந்து ஓட்டுனரை அடித்து தாக்கிய இருவர் (காணொளி)

(Photo: Koh Mui Fong/TODAY)

சிங்கப்பூரில், முகக்கவசத்தை முறையாக அணியச் சொன்ன பேருந்து ஓட்டுனரை தாக்கியதாக இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த நவம்பர் 2ஆம் தேதி காலை, 61 வயதான அஜீஸ் கான் ஷேர் கான் மற்றும் 70 வயதான ராபின்சன் ஆகிய இருவரும், முகக்கவசத்தை முறையாக அணியச் சொன்ன பேருந்து ஓட்டுனரை தாக்கியுள்ளனர்.

சாலைத் தடைகளை மீறி செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அதிகரிக்கும் சிறைத்தண்டனை, அபராதம்

அவர்கள் செலராங் ஹாஃப்வே ஹவுஸில் இருந்து பேருந்தில் ஏறியதாகவும் கூறப்படுகிறது.

சம்பவத்திற்கு முன்னர் அவர்கள் மது அருந்தியிருந்ததும், அதன் பின்னர் பேருந்தில் இருந்தபோதும் அவர்கள் கேன்களில் தொடர்ந்து மது அருந்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தானாக முன்வந்து கடுமையான காயத்தை ஏற்படுத்தியதற்காக, அஜீஸ் கானுக்கு புதன்கிழமை (டிசம்பர் 29) 10 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, மேலும் 24 நாட்கள் கூடுதல் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

70 வயதான மற்றொரு ஆடவரின் வழக்கு விசாரணை இன்னும் தொடங்கவில்லை.

என்ன நடந்தது?

கோ-அஹெட் சிங்கப்பூரின் ஊழியரான அந்த ஓட்டுனர், அவர்கள் இருவரையும் முகக்கவசத்தை சரியாக அணியச் சொன்னார், அதன் பிறகு அவர் தனது இருக்கைக்குத் திரும்பி, கட்டுப்பாட்டு அறைக்கு இதுபற்றிய விஷயத்தைத் தெரிவித்தார்.

போலீஸ் புகாரின் பேரில், பேருந்தை அங்கேயே நிறுத்தி கதவுகளை பூட்டுமாறு ஓட்டுனருக்கு அறிவுறுத்தப்பட்டது.

இறுதியில் லோயாங் அவென்யூவில் பேருந்து நிறுத்தப்பட்டது, நடந்தவற்றை உணர்ந்த இருவரும் கோபமடைந்து, ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த ஓட்டுனரை மிரட்டியுள்ளனர்.

அஜீஸ் கான் டிரைவரை நோக்கி அநாகரீகமான வார்த்தைகளை பேசியதாகவும், மேலும் கதவுகளைத் திறக்கும்படி ஓட்டுனரிடம் சத்தம் போட்டுள்ளார்.

அதற்கு ஓட்டுநர் மறுத்ததால், அஜீஸ் கான் அவரை மிரட்டும் வகையில் பேசி, இருக்கைக்குத் திரும்புவதற்குள் அவரது சட்டையைப் பிடித்து இழுத்தார்.

ஓட்டுநர் போன் செய்ய முயன்றபோது, ராபின்சன் ஓட்டுநர் ​​கையிலிருந்த போனை தட்டினார். அதனை அடுத்து, இருவரும் அவரைத் தாக்கியுள்ளனர்.

ஆன்லைன் தளத்தில் அந்தரங்க உறுப்புகளை படமெடுத்து பகிர்ந்த ஆடவர் கைது