ஆஸ்திரேலியா காட்டு தீ; கைகொடுக்கும் சிங்கப்பூர் விமான படை..!

Australia fires: RSAF Chinooks to bring relief supplies, help with evacuation . (Photo: Facebook / Ng Eng Hen)

ஆஸ்திரேலியாவில் பரவும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த சிங்கப்பூர் ஆகாயப் விமானப் படையின் (RSAF), இரண்டு சினூக்ஸ் ஹெலிகாப்டர்கள், காட்டுத் தீ நிவாரணப் பணிகளில் உதவ 42 வீரர்களுடன் புறப்பட்டு சென்றுள்ளது.

இதனை, சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென் செவ்வாய்க்கிழமை இன்று (ஜனவரி 7) பேஸ்புக் பதிவில் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க : தர்பார் படத்திற்கு தடை கோரி மனு – ‘காலா’ படத்தின் சிங்கப்பூர் உரிமை அளித்ததாக பதில் மனு…!

இந்நிலையில், நிவாரண முயற்சிகளுக்கு உதவ சிங்கப்பூர் வீரர்கள் ஆஸ்திரேலிய பாதுகாப்பு படையுடன் இணைந்து பணியாற்றுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் “சினூக்ஸ் ஹெலிகாப்டர்கள், தீயணைப்பு மற்றும் நிவாரணப் பொருட்களைக் கொண்டு வரும், மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து குடியிருப்பாளர்களை வெளியேற்றவும் அவைகள் உதவும்” என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : சிங்கப்பூர் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் இந்தியா பயணம்..!

இந்த காட்டுத் தீயைக் கட்டுப்படுத்துவதில் சிங்கப்பூர் விமான படை உதவ இருப்பதாக ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.