“ஆண்டுக்கு சராசரியாக எத்தனை வெளிநாட்டினரின் ‘Work Pass’ ரத்து?”- நாடாளுமன்றத்தில் அமைச்சர் விளக்கம்!

Photo: Change.Org

 

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் கூட்டத்தில் நேற்றைய (02/08/2021) விவாதத்தின் போது வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான ‘Work Pass’ குறித்து செங்காங் ஜி.ஆர்.சி. தொகுதியின் (Sengkang GRC) தொழிலாளர் கட்சியின் உறுப்பினர் லூயிஸ் சுவா (Workers’ Party MP Louis Chua) கேள்வி எழுப்பினார்.

இதற்கு நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்த மனிதவள மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் (Senior Minister of State for Manpower Koh Poh Koon), “சிங்கப்பூரில் 2016- ஆம் ஆண்டு முதல் 2020- ஆம் ஆண்டு வரை சட்டவிரோதமாக வேலை செய்ததன் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 160 வெளிநாட்டு தொழிலாளர்களின் ‘Work Pass’ ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்பு சட்டத்தின் கீழ் (‘under the Employment of Foreign Manpower Act’), ‘Work Pass’ வைத்திருப்பவர்கள் தங்கள் ‘Work Pass’-ல் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரத்துவ முதலாளிக்காக மட்டுமே வேலை செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். வேறு எந்த நபருக்கும் அல்லது வணிக நிறுவனத்திற்கும் வேலை செய்வது குற்றம். ‘Work Pass’ வைத்திருப்பவர்களைச் சட்டவிரோதமாக வேலைக்கு அமர்த்துவது குறித்து பொதுமக்கள் மற்றும் பிற பொது நிறுவனங்களின் புகார்கள், குறிப்புகள் மற்றும் பரிந்துரைகளை மனிதவள அமைச்சகம் ஆராய்கிறது.

தவறான கல்வித்தகுதிகளை சமர்ப்பித்த “Work Pass” வைத்திருக்கும் 11 பேர் பிடிபட்டனர்!

அதே நேரத்தில், மனிதவள அமைச்சகம் தனது சொந்த பகுப்பாய்வு மற்றும் தூண்டுதல்களின் அடிப்படையில் முன்கூட்டிய ஆய்வுகளை மேற்கொள்கிறது. அவர்களில் பெரும்பாலானோர் வேறு இடங்களில் பகுதி நேரம் செய்வது கணடறியப்பட்டது. அது போன்ற இடங்களில் தேவைப்படும் ஆவணங்களின்றி அவர்கள் வேலை செய்கிறார்கள். கேடிவி தொற்றுக் குழுமத்தில்(KTV cluster), அது போன்ற செயல்கள் கண்டறியப்பட்டதே உதாரணம் ஆகும். அங்கு பலர் வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்புச் சட்டத்தின் கீழ் குற்றங்களைச் செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

கேடிவி ஓய்வறைகள் (KTV lounges) மற்றும் பார்களில் (Bars), வெளிநாட்டு உபசரிப்பாளர்கள் சம்பந்தப்பட்ட கேடிவி இசைக்கூடங்களையும், மதுபானக் கூடங்களையும் உள்ளடக்கிய தொற்றுக் குழுமத்தில் நேற்றைய நிலவரப்படி, கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 251 ஆக அதிகரித்துள்ளது. இந்த கேடிவி குழுமம் சிங்கப்பூரின் மிகப்பெரிய சமூக அளவிலான தொற்றுக் குழுமமாக உருவெடுத்துள்ள ஜூரோங் மீன்பிடி துறைமுகத்துடன் தொடர்புடையது. நேற்றைய நிலவரப்படி, இந்த துறைமுகத்தில் சுமார் 1,045 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள் சட்டவிரோத வேலைவாய்ப்பு அல்லது அவர்களின் பணி அனுமதி நிபந்தனைகளை மீறுவது என்றால் என்ன? என்பதை தொழிலாளர்கள் புரிந்து கொள்ள அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறது மனிதவள அமைச்சகம். அந்த வகையில், சமூக ஊடகங்கள், ஆண்ட்ராய்டு கைபேசி செயலிகள், சாலைக்காட்சிகள் போன்றவற்றின் மூலமாக தொழிலாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

தேசியக் கொடிகள், தேசிய தின அலங்கார பேனர்களை வெட்டி சேதப்படுத்தியதாக ஆடவர் கைது

சட்டவிரோத வேலைகள் தொடர்பாக அமலாக்க நடவடிக்கைகள் ஏதுவாயிருப்பின், அது தொடர்பான விவரங்களை நாங்கள் வெளியிடுகிறோம். அத்துடன் தவறிழைக்கும் நிறுவனங்கள் பற்றியும் தெரிவிக்கப்படும்.

சட்டவிரோத வேலைவாய்ப்பில் குற்றவாளி என கண்டறியப்பட்ட ‘Work Pass’ வைத்திருப்பவர்களுக்கு 20,000 சிங்கப்பூர் டாலர் வரை அபராதம் மற்றும் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும், அவர்கள் சிங்கப்பூரில் பணிப்புரிய தடை விதிக்கப்படும்”. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

செல்லுபடியாகாத ‘Work Pass’ இல்லாமல் வெளிநாட்டவர்களை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகளுக்கு 30,000 சிங்கப்பூர் டாலர் வரை அபராதம் மற்றும் 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். மேலும், அவர்களிடம் வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்தும் சலுகைகள் பறிக்கப்படலாம்.