தவறான கல்வித்தகுதிகளை சமர்ப்பித்த “Work Pass” வைத்திருக்கும் 11 பேர் பிடிபட்டனர்!

Roslan Rahman/AFP

எம்பிளாய்மென்ட் பாஸ் (Employment Pass) மற்றும் எஸ் பாஸ் (S Pass) வைத்திருக்கும் 11 பேர், மனிதவள அமைச்சகத்திடம் (MOM) தவறான கல்வித் தகுதி சான்றிதழ்களை சமர்ப்பித்தது கண்டறியப்பட்டதாக மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறியுள்ளார்.

அவர்கள் 2018 முதல் 2020 வரை, இன்போகாம் டெக்னாலஜி (ICT) துறையில் பணிபுரிந்தவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் புதிய தொற்று குழுமம்

அதனை அடுத்து, அவர்களின் ஒர்க் பாஸ் ரத்து செய்யப்பட்டது. மேலும், அவர்கள் சிங்கப்பூரில் வேலை செய்வதற்கு நிரந்தரமாக தடை விதிக்கப்பட்டது.

கடந்த மூன்று ஆண்டுகளில் ICT துறையில் எத்தனை எம்பிளாய்மென்ட் பாஸ் மற்றும் எஸ் பாஸ் வைத்திருப்பவர்கள் போலி கல்வி தகுதி சான்றிதழ்களை சமர்ப்பித்துள்ளனர் என்ற எம்.பி கன் தியாம் போவின் கேள்விகளுக்கு டாக்டர் டான் நாடாளுமன்றத்தில் பதிலளித்தார்.

தங்கள் ஊழியர்களின் கல்வித் தகுதிகளின் நம்பகத்தன்மையையும் தரத்தையும், வேலை அனுமதி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் போது உறுதி செய்வதற்கான முதன்மைப் பொறுப்பு அனைத்து முதலாளிகளுக்கும் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உதவி செய்ய வயது ஒரு தடையே இல்லை – வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவிய சிறுவர்கள்!