வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் புதிய தொற்று குழுமம்

வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூர் வேலை
Photo: Roslam Rahman/AFP/Getty Images

சிங்கப்பூரில் புதிதாக 10 கிருமித்தொற்று குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தற்போது மொத்தமாக 83 குழுமங்கள் கண்காணிப்பில் உள்ளன, அதாவது ஒரு குழுமத்தில் மூன்று முதல் 1,045 வரை தொற்று பாதிப்புகள் உள்ளன.

உதவி செய்ய வயது ஒரு தடையே இல்லை – வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவிய சிறுவர்கள்!

வெஸ்ட்லைட் மண்டாய் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி (Westlite Mandai Dormitory) புதிய குழுமமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், யிஷுன் சமூக மருத்துவமனையும் இதில் புதிய குழுமமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக, சமூகத்தில் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை ஒரு வாரத்திற்கு முன்பு 1,056ஆக இருந்து, அது கடந்த வாரத்தில் 862ஆக குறைந்தது.

தற்போது 590 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு கட்டுப்படாதவர்களின் ‘பெர்மிட்’ அல்லது ‘பாஸ்’ ரத்து செய்யப்படலாம்