புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு கட்டுப்படாதவர்களின் ‘பெர்மிட்’ அல்லது ‘பாஸ்’ ரத்து செய்யப்படலாம்

Reopen borders Malaysia covid-19

புதிய COVID-19 பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு கட்டுப்படாத நிரந்தரவாசிகள் (PRs) மற்றும் நீண்ட கால அனுமதி வைத்திருப்பவர்களின் பெர்மிட் அல்லது பாஸ் ரத்து செய்யப்படும் என்று சிங்கப்பூர் எச்சரித்துள்ளது.

புதிய நடவடிக்கைகளுக்கு இணங்கத் தவறினால் அவர்களின் அனுமதி அல்லது பாஸ் ரத்து செய்யப்படலாம் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

போலி பாஸ்போர்ட் மூலம் சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்தவர் கைது!

COVID-19 பாதிப்புகள் அதிகரித்ததை அடுத்து, ஆஸ்திரேலியா மற்றும் சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு, சிங்கப்பூர் எல்லை கட்டுப்பாடுகளை அறிவித்தது.

இந்த புதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இரவு 11.59 மணி முதல் நடைமுறைக்கு வரும்.

சிங்கப்பூரில் தற்போது சமூக அளவில் தொற்று பாதிப்பு அதிகரித்துவருவதை அடுத்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

COVID-19: தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் ஏழு பேர்..