COVID-19: தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் ஏழு பேர்..

Pic: Juan Monino vía Getty Images

சிங்கப்பூரில் தற்போது 604 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆக்ஸிஜன் தேவைப்படும் நிலையில் தீவிர நோய்வாய்பட்டு தற்போது 33 பேர் உள்ளனர்.

போலி பாஸ்போர்ட் மூலம் சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்தவர் கைது!

மேலும், ஏழு பேர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) சிகிச்சை பெற்றுவருவதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது.

மேற்குறிப்பிட்ட 40 பேரில் மூன்று பேர் மட்டுமே முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் என்றும் அது கூறியுள்ளது.

60 வயதுக்கு மேற்பட்ட 26 முதியவர்களில், 24 பேர் முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை அல்லது முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும், அவர்கள் மிகவும் நோய்வாய்ப்பட்டிருக்கிறார்கள் என்றும் சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.