உதவி செய்ய வயது ஒரு தடையே இல்லை – வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவிய சிறுவர்கள்!

(Photo: AFP)

வெளிநாட்டிலிருந்து வந்து தங்கி வேலை செய்யும் 6800க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு “கப்கேக்”களையும், “குக்கீஸ்”களையும் கொடுக்க சிறுவர்கள் உதவி செய்துள்ளனர்.

விடுமுறை என்றாலே விளையாட்டில் ஆர்வம் காட்டும் சிறுவர்களுக்கு மத்தியில், சின்னஞ்சிறு வயதிலேயே உதவும் மனப்பான்மையோடு மற்றவர்களுக்கு உதவி செய்துள்ளனர் சிறுமி ராகாவும் (வயது 10) அவரது சகோதரர் ஓம்மும் (வயது 6).

ஜூன் பள்ளி விடுமுறை தொடங்கியதிலிருந்து இவர்களைப் போன்று 150க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர்கள் சுமார் 50 தங்குவிடுதிகளில் வசிக்கும் 6800க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு கொடுக்க “கப்கேக்”களையும், “குக்கீஸ்”களையும் பேக்கிங் செய்ய உதவி செய்துள்ளனர்.

புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு கட்டுப்படாதவர்களின் ‘பெர்மிட்’ அல்லது ‘பாஸ்’ ரத்து செய்யப்படலாம்

“AGWO” எனும் வெளிநாட்டு ஊழியர் நலத் தொண்டூழிய இயக்கம், கடந்த ஜூன் மாதத்திலிருந்து கோவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக தங்குவிடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்களுடைய பொதுத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்யக்கூட சிரமமப்படும் நிலையில், அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக “கப்கேக்”களையும், “குக்கீஸ்”களையும் வழங்கி வருகிறது.

இச்சேவையில் ராகா, ஓம் போன்ற பல்வேறு சிறுவர்கள் இவைகளை பேக்கிங் செய்வதும், மனதிற்கு தன்னம்பிக்கையூட்டும் விதமாக வாழ்த்து அட்டைகளையும் எழுதி அதில் வைத்து உதவி செய்கின்றனர்.

Photo: AGWO

இதுபோன்று பலருக்கும் உதவி செய்வதற்காகவே இம்முயற்சி தொடங்கப்பட்டது என “AGWO” இயக்கத்தை நிறுவிய உறுப்பினரான திரு. சாமுவேல் கிஃப்ட் ஸ்டீபன் (வயது 44) தெரிவித்தார்.

பல நாட்களாக தன் குடும்பத்தையும், பிள்ளைகளையும் பிரிந்து பணியாற்றி வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு, இதுபோன்று சிறுவர்கள் செய்யும் உதவியும், அன்பளிப்பும் ஒருவித மனஅமைதியையும், புத்துணர்வையும் ஏற்படுத்தும் அதற்காகவே இதை ஏற்பாடு செய்தோம் என்கிறார், “AGWO” இயக்கத்தின் தொண்டூழியர்களில் ஒருவரான தொழிலதிபர் திருமதி. ம. பிரியா (வயது 53).

கோமளாஸ் உணவகத்தில் இந்திய உணவு முறையில் புதிய முயற்சி