குற்றங்களை தடுக்க உதவிய 3 தனிநபர், 5 அமைப்புகளுக்கு காவல்துறை விருதுகள்

(Photo: SPF)

கிளமென்டி காவல்துறை பிரிவு, குற்றங்களைத் தடுப்பதற்காக தங்களுக்கு உதவிய 3 தனிநபர்களையும், இணைந்து செயல்பட்ட 5 அமைப்புகளையும் பாராட்டி விருதுகள் வழங்கியுள்ளது.

இங் டெங் ஃபாேங் மருத்துவமனையில் மூத்த பாதுகாப்பு அதிகாரியாகப் பணிபுரியும் திரு. சாமிநாதன் தினகரன் அவர்களுக்கும், பாெது இடத்தில் மானபங்பப் படுத்தப்பட்ட ஒருவருக்கு உதவிய, நல்ல மனதுடையவருக்கும், திருடர்களைப் பிடிக்க உதவிய மற்றொரு நபருக்கும், காவல்துறை பொதுநல விருது வழங்கி கெளரவித்தது.

அட்டவணை முறைப் பரிசோதனையில் தெரியவந்த வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதி குழுமம்.!

மருத்துவமனையில் பணிபுரியும் திரு. சாமிநாதன் தினகரன், கழிவறையில் ரகசியமாக ஒருவரைத் தவறான கண்ணாேட்டத்துடன் பார்த்த ஒருவரை பிடிக்க காவல்துறைக்கு உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூரோங் வட்டாரத்தில் அமைந்துள்ள சில (7-11) செவன்-இலெவன் கடைகளும், இன்னும் சில அமைப்புகளும் பல்வேறு குற்றச் செயல்களை தடுக்க உதவியதால், இவர்களின் நற்செயல்களைப் பாராட்டி காவல்துறை விருது வழங்கப்பட்டது.

இந்நிகழ்வினை காவல்துறை துணை ஆணையரும், கிளமென்டி காவல்துறை பிரிவின் தளபதியுமான மார்க் இ அவர்கள் அறிந்து விருது வழங்கியோரைப் பாராட்டினார்.

மேலும், இதுபோன்ற பாெதுநல உணர்வு அதிகமாகவும் பரவலாகவும் இருந்தால், நாட்டில் உள்ள குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கும், அவர்களை குற்றம் செய்யாமல் தடுப்பதற்கும் உதவியாக இருக்கும் என அவர் தெரிவித்தார். விருது வென்றவர்களின் செயல்கள், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாடு வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு