டாக்ஸியிலேயே பிறந்த குழந்தை… தனது 24 வருட அனுபவத்தில் இதுவே முதன்முறை என நெகிழ்ந்த ஓட்டுநர்!

baby-born taxi comfort-delgro
Comfort DelGro Taxi /Facebook

சிங்கப்பூரில் டான் பூன் ஹோ என்ற 24 வருட அனுபவமுள்ள மூத்த டாக்ஸி ஓட்டுநர், தன் 20 வருட பணியில் முதன்முறையாக டாக்ஸியில் குழந்தை பிறந்ததை கண்டுள்ளார்.

கடந்த ஜன. 13, 2022 அன்று தனது டாக்ஸியில் பிறந்த குழந்தை குறித்து அவர் கூறியுள்ளார்.

“விண்வெளியிலும் சிங்கப்பூர் சாதனை” – உள்நாட்டு முதல் விண்வெளி கேமராவுடன் விண்ணில் செலுத்த தயாராகும் செயற்கைக்கோள்!

ComfortDelGro Taxi முகநூல் பதிவின் படி; கடந்த ஜனவரி 13 அன்று அதிகாலை 4 மணியளவில் Ubi யில் இருந்து தம்பதியர் டாக்ஸியில் பயணம் செய்து வந்ததாக ஓட்டுநர் பகிர்ந்துள்ளார்.

அதில் பயணித்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு இடுப்பு வலி ஏற்பட்டது போல் தோன்றியதால், தம்பதியினர் KK பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்குச் செல்ல விரும்பினர். அப்போது இடையிலேயே, அவரது தண்ணீர் குடம் உடைந்ததாகவும், அதனால் “குழந்தை வெளியே வருகிறது!” என பெண்மணி வெளிப்படையாக சத்தமிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விரைந்து செயல்பட்ட ஓட்டுநர்

பயத்தின் காரணமாக, 10 நிமிடங்களில் செல்ல கூடிய பார்க்வே ஈஸ்ட் மருத்துவமனைக்கு முதலில் செல்லலாம் என்று டான் அவரிடம் பரிந்துரைத்தார்.

பின்னர், மருத்துவமனையை அடைந்ததும், டாக்சியில் வைத்தே குழந்தையை பிரசவம் செய்ய வேண்டி செவிலியர்கள் மற்றும் மருத்துவரை கணவர் அழைத்தார்.

அந்த பிரசவம் சுமார் 15 நிமிடங்கள் நீடித்தது என்றும், ஆனால் அது ஒரு யுகம் போல அவருக்கு தோன்றியதாகவும் டான் கூறினார்.

நன்றி

குழந்தை பிறந்த பிறகு, கணவர் டானுக்கு நன்றி தெரிவித்து அவருக்கு டிப்ஸ் கொடுத்தார்.

அனைத்து வகையான ஓட்டுனர்களும் சாதாரணமானவர்கள் இல்லை, நம்மை காக்கும் ஒரு வித கேடயம்.

‘டாக்ஸியில் பிறந்தார்’

அவர்கள் யார் என்பது தெரியவில்லை என கூறிய அவர், “அவர்கள் நலமாக இருக்கிறார்கள் என்பதை அறிவது உண்மையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்” என்றார்.

மேலும், பிறப்புச் சான்றிதழில் ‘டாக்ஸியில் பிறந்தார்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தால் நன்றாக இருக்கும்!” என்றார்.

இனி எந்த கட்டுப்பாடுகளும் இல்லை…எல்லைகளைத் திறக்க தயாராகும் மலேசியா – சிங்கப்பூரில் எப்போது?