ஏழு மாத குழந்தையின் வாயில் எலக்ட்ரானிக் சிகரெட்டை வைத்தவரின் கதி இதுதான் ! – விளையாட்டுக்குக் கூட இப்டி பண்ணாதீங்க!

baby-malaysia-vape
குழந்தையின் வாயில் எலக்ட்ரானிக் சிகரெட்டை (Vape) இருமுறை வைத்த மலேசியர் கைது செய்யப்பட்டுள்ளார்.குழந்தையின் வாயில் வேப் கருவி இயக்கத்தில் இல்லாத போது வைப்பதை வீடியோ எடுத்து கேலியாக இணையத்தில் பதிவிட்டனர்.இந்தக் காணொளி பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது.குழந்தையின் தாய் மற்றும் வீடியோவைப் பார்த்த மற்றொரு நபர் இருவரும் இது குறித்து காவல்துறையிடம் புகாரளித்தனர்.

ஏழு மாத குழந்தை மூன்று பெரியவர்களுடன் ஒரு உணவகத்தில் இருந்தபோது நகைச்சுவையாக வேப் கருவி செயல்படாத நிலையில் குழந்தையின் வாயில் சாதனம் வைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.இந்தக் காட்சியை இன்ஸ்டாகிராமில் தாயின் சகோதரி பதிவேற்றியுள்ளார்.குற்றம்சாட்ட்டப்பட்டவரும் இவரும் நண்பர்கள்.

இணையத்தில் பரவிய 15 வினாடிகள் கொண்ட வீடியோ இன்ஸ்டாகிராம் ஸ்டோரியின் ஸ்க்ரீன் ரெக்கார்டிங் என்று கூறப்படுகிறது.காணொளியில் ஒரு ஆண் குழந்தைக்கு இரண்டு முறை வெப் கருவியை வாயில் வைத்து எடுப்பதைக் காணலாம்.மற்றொரு பெண் அந்த நபரை தடுக்க முயற்சிப்பது கேமராவில் பதிவாகியுள்ளது. மீண்டும் குழந்தையின் வாயில் வேப் கருவியை வைப்பதற்குள் மற்ற பெண் சிரித்தாள்.

பல்வேறு விமர்சனங்கள் மற்றும் புகார்களுக்கு மத்தியில் சம்பவ நாளான ஆகஸ்ட் 6 ஆம் தேதி இன்ஸ்டாகிராம் ஸ்டோரியை வெளியிட்ட அவர், குழந்தைக்கு வேப் கருவியை ஊட்டியதை ஒப்புக்கொண்டார்.அதற்கு மன்னிப்புக் கேட்டார்.