உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: இந்திய வீரரை வீழ்த்தி சிங்கப்பூர் வீரர் லோ கியான் யூ அபாரம்!

Photo: BWF World Championships 2021

26- வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி (Badminton World Championships) ஸ்பெயின் நாட்டில் உள்ள ஹுயெல்வா (Huelva) நகரில் நடைபெற்றது. இதில் நேற்று (19/12/2021) நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்தை, சிங்கப்பூர் பேட்மிண்டன் வீரர் லோ கியான் யூ (Loh Kean Yew) எதிர்க்கொண்டார்.

நாம் தமிழர் கட்சி நிர்வாகிக்கு சிங்கப்பூர் அரசு வாழ்நாள் தடை விதித்தது ஏன்?- சீமான் பதில்!

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டி சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது. ஆரம்ப முதலே லோ கியான் யூ போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், முதல் செட் இந்திய வீரர் கிதாம்பி ஸ்ரீகாந்துக்கு மிகவும் சவாலானதாக அமைந்தது. அதைத் தொடர்ந்து, இரண்டாவது சுற்றிலும் சிங்கப்பூர் வீரர் ஆதிக்கம் செலுத்த, இந்திய வீரர் போராடித் தோற்றார்.

இதனால், சிங்கப்பூர் வீரர் லோ கியான் யூ 21-15, 22- 20 என்ற நேர் செட் கணக்கில் கிடாம்பி ஸ்ரீகாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன் மூலம் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் சிங்கப்பூர் வீரர் என்ற பெருமை பெற்றுள்ளார். அவருக்கு தங்க பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. வரலாற்று வெற்றியை பதிவு செய்த சிங்கப்பூர் வீரருக்கு சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப், பிரதமர் லீ சியன் லூங் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரில் புதிதாக 255 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி!

அதேபோல், இறுதி போட்டியில் தோற்றாலும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த முதல் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த். அத்துடன் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் வெள்ளி பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார். அவருக்கும் இந்திய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.