சிங்கப்பூரில் புதிதாக 255 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி!

Pic: File/Today

சிங்கப்பூரில் நேற்று (19/12/2021) மதியம் 12.00 PM மணி நிலவரப்படி, புதிதாக 255 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் அளவில் 188 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சமூக அளவில் 182 பேருக்கும், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் 6 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் 67 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,75,910 ஆக உயர்ந்துள்ளது.

மலேசியாவில் கடும் வெள்ளம்: தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், 21,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்

கொரோனா பாதிப்பால் சிகிச்சைப் பலனின்றி மேலும் மூன்று பேர் உயிரிழந்தனர். இதனால் சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 813 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக 496 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் 62 பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், 36 பேர் ஐ.சி.யூ.வில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஐ.சி.யூ.வில் சிகிச்சைப் பெற்று வருபவர்களில், 7 பேரின் உடல்நிலை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ஓமிக்ரான் பாதிப்பால் ஊழியர் தங்கும் விடுதிகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? – அமைச்சர் பதில்

நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்த 503 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.