சிங்கப்பூர் பாலஸ்டியர் சாலையில் கிரேன் விழுந்து விபத்து; ஒருவர் காயம்.!

balestier road crane accident
Pic: Watson Wong/Seithi

சிங்கப்பூர் பாலஸ்டியர் (Balestier) சாலை அருகே லாரியில் சென்று கொண்டிருந்த கிரேன் (Crane) நடையர் மேம்பாலம் மீது மோதியதில் விபத்துக்குள்ளானது.

கிரேன் பொருத்தப்பட்டிருந்த அந்த லாரி நேற்று (04-05-2020) காலை 10.30 மணி அளவில் லெவண்டர் தெருவை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரேன் முறிந்து விழுந்ததில் சாலையின் மூன்று தடங்களும் அடைத்துக்கொண்டது. இதனையடுதபாலஸ்டியர் சாலையில்  போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடித்த சிங்கப்பூர் போக்குவரத்துத்துறைக்கு அமைச்சர் வாழ்த்து!

இந்த கிரேன் விழுந்த விபத்தில், ஒருவர் லேசான காயம் அடைந்ததாகவும், அவர் மருத்துவமனைக்குச செல்ல மறுத்துவிட்டார் என்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.

மேலும், இந்த சம்பவத்தை அடுத்து 37 வயதான லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். பிற்பகல் 2 மணிக்கு பிறகு, பாலஸ்டியர் சாலை போக்குவரத்துக்கு திறந்துவிடப்பட்டதாக சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவின் கொரோனா தடுப்புப் பணிகளுக்காக நிதி திரட்டிய சிங்கப்பூர் அமைப்பு!