ஸ்கூட் விமானம் சிங்கப்பூரில் தரையிறங்குவதில் தாமதம்… பயணிகள் செய்த வேலையால் அவதி

Bali-Singapore flight landing delayed
TikTok/audikhalid

பாலியிலிருந்து நேற்று முன்தினம் (நவம்பர் 14) புறப்பட்ட ஸ்கூட் பயணிகள் விமானம் சிங்கப்பூரில் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

ஏனெனில், பயணிகள் சிலர் தங்கள் சீட் பெல்ட்டை போட மறுத்ததால் விமானம் இறங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

சிங்கப்பூரில் ஆடவர் ஒருவரை காணவில்லை – தேடிவரும் போலீஸ்

இந்த பயணிகளின் ஒழுங்கற்ற நடத்தையால் TR285 விமானத்தை பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் செயல்பாடுகளை நிறுத்தினார் என்று Scoot அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் விமானம் சாங்கி விமான நிலையத்தில் இரண்டாவது முறையில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

சம்பந்தப்பட்ட பயணிகள் மேலதிக விசாரணைக்காக விமான நிலைய அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டனர் என்றும் அது கூறியது.

விசாரணைகள் தொடர்வதாகவும், பொதுமக்கள் தவறான ஊகங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் ஸ்கூட் குறிப்பிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் இருந்து சிங்கப்பூர் வந்த பள்ளி சிறுமிகள்.. கடைகளில் உள்ளாடை திருட்டு – CCTV காட்சிகளில் சிக்கிய ஐவர்