“வெளிநாட்டு ஊழியர்களை லாரியில் ஏற்றிச் செல்லக் கூடாது” – மீண்டும் சூடு பிடிக்கும் விவாதம்

"வெளிநாட்டு ஊழியர்களை லாரியில் ஏற்றிச் செல்லக் கூடாது" - மீண்டும் சூடு பிடிக்கும் விவாதம் Ng renews call to ban ferrying workers on lorries சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர்களுக்கு கவலை தரும் அறிவிப்பு - இனியும் அதே தான்
Stomp

வெளிநாட்டு ஊழியர்களை லாரியில் ஏற்றிச் செல்லும் நடைமுறையை தடை செய்ய வேண்டும் என்று MP திரு லூயிஸ் இங் நாடாளுமன்றத்தில் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

இதை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் சாலை வரைபடத்தை உருவாக்கவும் மற்றும் இடைக்காலத்தில் இதர பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தவும் அவர் பரிந்துரை செய்தார்.

சிங்கப்பூரில் குறையும் வேலைவாய்ப்பு.. ஊழியர்கள் வேலையில் இருந்துகூட நீக்கப்படலாம்

இது குறித்து பேசிய திரு இங், லாரிகள் வணிக நோக்கத்திற்காக மட்டுமே செயல்பட வேண்டும் என்றும், ஊழியர்களை அதில் ஏற்றிச்செல்வது வழக்கத்திற்கு மாறானது என்றும் மேலும் அது பாதுகாப்பு இல்லாதது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்புக் கருதி, லாரிகளின் பின்புறத்தில் எந்தப் பயணிகளையும் ஏற்றிச் செல்ல அனுமதிக்கக் கூடாது என்றும், அதை உடனடியாகச் செய்ய முடியாவிட்டாலும் கூட, அதனை செயல்படுத்த கால இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்றும் திரு இங் கூறினார்.

லாரிகளின் பின்னால் ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பிரச்சினை குறித்து கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த நான்கு லாரி விபத்துகளில் இரண்டு ஊழியர்கள் உயிரிழந்தனர், மேலும் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனை அடுத்து லாரி தொடர்பான விவாதம் சூடுபிடிக்க தொடங்கியது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

சிங்கப்பூரில் இருந்து கோவை சென்ற இருவருக்கு செக்.. தீவிர விசாரணை