கல்லாங் MRT அருகே ரயிலில் அடிபட்டு உயிரிழந்த வெளிநாட்டு ஊழியர்…போதைப்பொருள் அருந்தி தற்கொலை

(Photo: Julia Yeo)

கல்லாங் மற்றும் லாவெண்டர் MRT நிலையத்திற்கு இடையே தண்டவாளத்தில் ஆடவர் ஒருவர் ரயிலில் மோதி கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் முன் உயிரிழந்தார்.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணையில், இது தற்கொலை என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

போலீசிடம் “உங்கள் சம்பளத்தை நாங்கள் செலுத்துகிறோம்..****” என தகாத முறையில் பேசிய இந்திய ஆடவருக்கு அபராதம்!

உயிரிழந்த அந்த ஆடவர் 31 வயதான வங்கதேசத்தை சேர்ந்த அகமது பைசல் என்பவர் ஆவார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளில், அவர் உயிரிழந்த அந்த நாளில், அவருக்கு நீதிமன்ற விசாரணை இருந்துள்ளது.

அவர் அதற்கு வரத் தவறியதாகவும், அந்த வழக்கு போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டு என்றும் கூறப்பட்டுள்ளது.

அவர் இறப்பதற்கு முன் போதைப்பொருள் உட்கொண்டார் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் ஏற்பட்ட விபத்தில் காலை இழந்த தமிழக ஊழியருக்கு நீங்க நேரடியா உதவி செய்யலாம் – முழு விவரம்

என்ன நடந்தது?

கடந்த ஆண்டு பிப். 25 அன்று இரவு 9 மணியளவில், கல்லாங் MRT நிலையத்திற்கு அருகே ரயில் ஓட்டுநர் எதோ ஒன்றை தாக்கியதாக தகவல் கொடுத்தார்.

பின்னர் நிலைய மேலாளர் அந்த பாதையில் சோதனை மேற்கொள்ள அனுப்பப்பட்டார், அப்போது நிலையத்திலிருந்து சுமார் 150மீ தொலைவில் ஆடவர் ஒருவர் அசைவின்றி காணப்பட்டார்.

இந்த சம்பவம், பாசீர் ரிஸை நோக்கி செல்லும் கிழக்கு-மேற்கு பாதையில் நிகழ்ந்துள்ளது.

நிர்வாண டிக்டாக் காணொளி.. வீட்டுப் பணிப்பெண் செய்த கூத்து – சிறையில் அடைத்த போலீஸ்