இரண்டு நாட்கள் காணாமல் போன நாய்க்குட்டி – அடர்ந்த காட்டிற்குள் இருந்து எவ்வாறு மீட்கப்பட்டது ?

beagle dog

செந்தோசாவில் 2 நாட்கள் காணாமல் போன பீகிள், இம்பியா வாக் பக்கமுள்ள வடிகாலில் இருந்து மீட்கப்பட்டது. தீவில் லாங்போர்டிங் செய்து கொண்டிருந்த ஒரு தம்பதியினர் மீட்டனர். லேடி என்ற ஒரு வயதுடைய பீகிள் நாய் கடற்கரையில் பட்டாசு வெடித்ததையடுத்து,, பயந்துபோய் ஓடிவிட்டது.

பீகிள் காணாமல் போன பிறகு, இரண்டு நாட்களாக செந்தோசாவில் பல மணிநேரம் தேடியும் பலனளிக்கவில்லை. விலங்கு தொடர்பாளர் ஒருவர், லேடி காட்டில் ஒரு பெரிய மரத்தின் அருகே அமர்ந்து ஒளிந்து கொண்டிருப்பதாக கூறினார். தொலைந்துபோன மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட செல்லப்பிராணிகளுக்காக டெலிகிராம் குழு மூலம் லேடியின் உரிமையாளரைத் தொடர்புகொண்டனர் அத்தம்பதியினர், இதை கேள்வியுற்றதும் உரிமையாளர்கள் உடனே விரைந்தனர். அங்கு சென்றதும், உரிமையாளர் வடிகாலில் இறங்கி, லேடியை மீட்டார். செந்தோசாவில் உள்ள அந்த அடர்ந்த காட்டில் லேடியைத் தேட ஒரு தேடுதல் வேட்டையை ஏற்பாடு செய்தனர். ஆனால்அதிர்ஷ்டவசமாக, ஒரு நாள் முன்பு பீகிள் கண்டுபிடிக்கப்பட்டதால், தேடுதல் வேட்டை தேவைப்படவில்லை.
நாய்க்குட்டி மீட்கப்பட்டபோது தலையில் விழுந்த கீறல்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் நாய்க்குட்டி மீட்கப்பட்டதையடுத்து அரவணைத்துக் கொண்டனர். நாய்க்குட்டியின் சிறு காயங்களுக்கு சுத்தம் செய்யும் திரவம், அமைதிப்படுத்தும் மாத்திரைகள் மற்றும் கிருமி நாசினி கிரீம் போன்றவை பரிந்துரைக்கப்பட்டது.