ஒரேயொரு போஸ்ட்தான் என்னாச்சு பாருங்க! – 4 விரல் உணவகத்தில் உடனடி வேலை ;வேலைவாய்ப்பு விளம்பரத்தால் முகநூலில் விவாதம்

best salary singapore malaysia jobs

4 Fingers Crispy Chicken நிறுவனம் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் உள்ள தங்கள் உணவக நடவடிக்கைகளுக்காக வேலைக்கு ஆள் சேர்க்கிறது.பணியமர்த்தல் நடவடிக்கையின் ஒருபகுதியாக சிங்கப்பூர் நிறுவனம் இரு நாடுகளிலும் காலிப்பணியிட விளம்பரம் உள்ள சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது.வேலைவாய்ப்புக்கான சம்பள வரவுகளை ஒப்பிட்டுப் பார்த்த ஒருவர் சுவரொட்டியின் புகைப்படத்தை முகநூலில் வெளியிட்டார்.

சம்பள வரம்பு குறித்து முகநூலில் இதயப்பூர்வமான விவாதங்கள் நடைபெற்றன.அதாவது மலேசியாவில் ,ஒரு உதவி உணவக மேலாளரின் சராசரி சம்பளம் மாதம் RM2,200 (S$687) ஆகும்.ஆனால் அதே பணிக்கு சிங்கப்பூரில் S$3,800 (RM12,177) வரை சம்பாதிக்கலாம்.இந்த இடுகை 400 க்கும் மேற்பட்ட கருத்துகளை பெற்றது.

வாழ்க்கைச் செலவினங்களில் சிங்கப்பூருடன் ஒப்பிடும்போது மலேசியாவின் வாழ்கைச் செலவினம் மிகக்குறைவு என்பதால் சம்பள வரம்பு குறைவாக உள்ளது என்று கருத்துகளில் சிலர் குறிப்பிட்டனர்.வேலைக்கு ஊழியர்களை ஈர்ப்பதற்காக மலேசியாவின் சம்பள வரம்போடு ஒப்பிட்டு விளம்பரத்தில் தெரிவிக்கப்படுகின்றன.

உதாரணமாக,சிங்கப்பூரில் பகுதி நேர ஊழியர்கள் பெறும் சம்பளத்தை மலேசியாவில் முழுநேர ஊழியர்கள் அதிக சம்பளமாகப் பெறுவார்கள்.அதிக சம்பளத்தைப் பெற மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு செல்ல கருத்துக்கள் பிரிவில் ஒருவரையொருவர் தூண்டினர்.