புதிய 20 வெள்ளி நோட்டுகள் சுமார் $998 வெள்ளிக்கு மறுவிற்பனை ஆகியுள்ளது.!

சிங்கப்பூர் Carousell மற்றும் eBay ஆகியவற்றில் புதிய $20 வெள்ளி பண நோட்டுகள் சுமார் $988 வரை மறு விற்பனை ஆகியுள்ளது.

சிங்கப்பூர் தொடங்கி 200 ஆண்டுகள் நிறைவடைந்ததன் நினைவாக புதிய 20 வெள்ளி நோட்டுகளை கடந்த ஜூன் 5 ஆம் தேதி MAS வெளியிட்டது. சுமார் $40 மில்லியன் புதிய நோட்டுகள் அச்சிடப்பட்டு வெளியானது. ஒருவர் 20 எண்ணிக்கையிலான 20 வெள்ளி நோட்டுகளை மாற்றிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த புதிய 20 வெள்ளி நோட்டுகள் 9 முக்கிய வங்கிகளில் ஜூன் 10 ஆம் தேதி பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து வங்கி வாசல்களில் காலை 8 மணிக்கே கூட்டம் களைகட்ட தொடங்கியது. மதிய வேளையில் சில வங்கிகளில் இந்த புதிய வெள்ளி நோட்டுகள் இருப்பு இல்லாமல் போனது. பிறகு செவ்வாய்க்கிழமை (ஜூன் 11) அனைத்து வங்கிகளிலும் இந்த நோட்டுகள் முற்றிலும் மாற்றப்பட்டு விட்டது.

வெளியிடப்பட்ட புதிய 20 வெள்ளி நோட்டு!

இதனை அடுத்து, Carousell தளத்தில் சுமார் 400 வெள்ளி நோட்டுகள் மற்றும் eBay தளத்தில் 35 வெள்ளி நோட்டுகள் மறு விற்பனை பட்டியல் வெளியாகி இருந்தது. அதிகமாக $25 – $30 க்கு 20 வெள்ளி நோட்டுகளை கேட்டிருந்தனர்.

விருப்பமான சீரியல் நம்பரை கொண்ட வெள்ளி நோட்டுகள் சுமார் 100 டாலர் வரை சென்றன. AE159888 என்ற சீரியல் நம்பரை கொண்ட 20 வெள்ளி நோட்டு சுமார் $988 வெள்ளி வரை விற்பனை ஆகியுள்ளது.