பேருந்தில் சென்றவாறு பொங்கல் ஒளியூட்டைப் பார்த்து ரசித்ததுடன் புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்!

பேருந்தில் சென்றவாறு பொங்கல் ஒளியூட்டைப் பார்த்து ரசித்ததுடன் புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்!
Photo: LISHA

 

பொங்கல் பண்டிகையையொட்டி, சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா (Little India) பகுதியில் உள்ள சாலைகள் வண்ணமின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், வண்ணமின் அலங்கரிக்கப்பட்டுள்ள பொங்கல் வரவேற்பு தோரணங்கள் காண்போரை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இந்த பொங்கல் ஒளியூட்டை சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் மட்டுமின்று, சிங்கப்பூரர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் செல்பி புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர். இந்த ‘பொங்கல் ஒளியூட்டு’ லிஷா (Lisha) அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் அதிகரிக்கும் வாடகை, உயரும் செலவுகள்.. கடைகளை காலி செய்யும் வியாபாரிகள்

இந்த நிலையில், சிங்கப்பூரர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என அனைவரும் பேருந்தில் சென்றவாறு பொங்கல் ஒளியூட்டு பார்த்து ரசிக்கும் வகையில், ‘லிஷா’ பேருந்து சுற்றுலாவிற்கு (Big Bus Tour 2024) ஏற்பாடு செய்திருந்தது. ஜனவரி 15, 16, 17 ஆகிய மூன்று நாட்கள் மட்டும் நாள்தோறும் மாலை 06.30 மணிக்கு பேருந்து இயக்கப்பட்டது.

பேருந்தில் சென்றவாறு பொங்கல் ஒளியூட்டைப் பார்த்து ரசித்ததுடன் புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்!
Photo: LISHA

ஆர்ச்சர்ட் ஹோட்டல் (Orchard Hotel) பேருந்து நிறுத்தத்தில் இருந்து புறப்பட்ட பேருந்தில் சிங்கப்பூரர்கள், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் ஆகியோர் பேருந்தின் மேல் தளத்தில் உள்ள இருக்கைகளில் அமர்ந்தபடி, பொங்கல் ஒளியூட்டைப் பார்த்து ரசித்ததுடன் புகைப்படங்களையும், செல்பி புகைப்படங்களையும் எடுத்து மகிழ்ந்தனர்.

விமானத்தின் கழிவறையில் சிக்கி கொண்ட இந்திய பயணி.. பயணம் முழுவதும் சிக்கி தவித்த பரிதாபம்

இந்த பேருந்து பயணித்திற்கு ஒரு நபருக்கு 8 வெள்ளி கட்டணமாக வசூலிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.