கார் மோதி கருஞ்சிறுத்தை மரணம் – வீடியோ பார்த்து நெட்டிசன்கள் கவலை

Black panther dies
@jnmalaysia/Twitter

கார் மோதிய விபத்தில் சிக்கிய கருஞ்சிறுத்தை ஒன்று உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மலேசியாவின் சிம்பாங் பெர்டாங்கில் நேற்று மே 20 அன்று இந்த சாலை விபத்து நடந்தது.

செரெம்பனில் இருந்து குவாலா கிளவாங்கிற்கு குடும்பத்துடன் பயணித்த கார் கருஞ்சிறுத்தை மீது மோதியதாக சொல்லப்பட்டுள்ளது. அந்த காரை 38 வயதுடைய நபர் ஓட்டிச் சென்றதாக பெர்னாமா தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள்… Work pass வேலை குளறுபடி – 27 பேர் அதிரடி கைது

மலையிலிருந்து கார் வலதுபுறமாகத் திரும்பியபோது, ​​​​சிறுத்தை திடீரென்று சாலையின் வலது பக்கத்திலிருந்து குறுக்கே சென்றதால், வாகனத்தை விரைவாக மாற்ற நேரமில்லாததால் அதன் மீது மோதியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விபத்து நடந்த சாலை வழியாக சென்ற காரில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவில், சிறுத்தை நடுரோட்டில் அசையாமல் கிடப்பதைக் காண முடிகிறது.

மற்றொரு வீடியோவில், காயம்பட்ட இடது பின்னங்காலுடன் அது சாலையில் நொண்டிச் செல்வதையும் காண முடிந்தது.

ஆனால் இறுதியாக சுமார் நான்கு மீட்டர் தொலைவில் உள்ள வடிகாலில் அது இறந்து கிடந்ததாக கூறப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளி சிங்கப்பூரரை காணவில்லை – எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் இருந்து விழுந்ததாக தகவல்