பார்வையில்லா ஊழியரின் மசாஜ் கடை: வாரம் 7 நாளும் உழைப்பு.. உதவிக்கு யாரும் இல்லாமலும் உழைக்கும் சிங்கப்பூரின் இரும்பு மனிதர்

blind-masseur-60-works-7-days-a-week-in-bedok
Andrew Koay

கண்பார்வை இல்லாத 69 வயதுமிக்க ஊழியர் ஒருவர் சிங்கப்பூரில் மசாஜ் செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

அவரின் கடை வாரத்தின் 7 நாட்களும் இயங்குகிறது. விடுமுறை எடுக்காமல் உழைக்கும் ஊழியர் திரு இஸ்மாயில் பற்றிய பதிவு தான் இது.

சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூவின் 100வது பிறந்தநாள் நினைவு நாணயம்: வெளிநாட்டு ஊழியர்களும் பெற்றுக்கொள்ள ஏற்பாடு

பெடோக் 538 ஃபுட் சென்டருக்கு அருகில் உள்ள நடைபாதையில் திரு இஸ்மாயிலின் மசாஜ் கடை உள்ளது.

ஒழுங்குமுறையற்ற தற்காலிகமானதாக தோற்றத்தைக் கொண்ட அவரின் கடை 2006 முதல் இயங்கி வருகிறது என்பதை அவரிடம் பேட்டி எடுத்த Mothership குறிப்பிட்டுள்ளது.

கண் பார்வையற்ற அவர் தினமும் ஒன்பது மணி நேரம் வேலை செய்வதாகவும், வாரத்தில் ஏழு நாட்களிலும் கடை இருப்பதாகவும் கூறினார்.

அவர் பிறவியில் இருந்து பார்வையற்றவர் அல்ல; கடுமையான காய்ச்சலுக்குப் பிறகு தனது 14 ஆம் வயதில் அவர் தன் பார்வையை இழந்ததாக Mothership குறிப்பிட்டுள்ளது.

பின்னர் அவர் இரண்டு பயிற்றுனர்களின் கீழ் மசாஜ் முறையை கற்றுக்கொண்டார்: முதலில் சீன-பாணி மசாஜ், பின்னர் மலாய்-பாணி. பின்னர் அவற்றை இணைத்து தனக்கென நுட்பமாக தனித்துவத்தை அவர் உருவாக்கினார்.

“நான் செய்யும் மசாஜ் குறித்து யாரும் புகார் செய்ததில்லை. நான் தனியாக இருக்கிறேன், இருப்பினும் நான் செய்யும் வேலையில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்,” என்று அவர் விளக்கினார்.

இஸ்மாயில் நாள் ஒன்றுக்கு எத்தனை வாடிக்கையாளர்களை சந்திக்கிறார் என்பதைப் பகிர்ந்து கொள்ள மறுத்துவிட்டார்.

இருப்பினும், அவர் ஒரு நாளைக்கு S$100 முதல் S$200 வரை சம்பாதிப்பதாக கூறினார். “சில நேரங்களில் அதை விட அதிகம் இருக்கும்,” என்று அவர் கூறியதாக அது குறிப்பிட்டுள்ளது.

அவரின் முதல் மனைவி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் அவர் மறுமணம் செய்து கொண்டார்.

“ஆனால் இரண்டாம் மனைவி என் சேமிப்பு S$50,000 பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டார், திரும்பி வரவே இல்லை.”

“இந்தோனேசியாவில் வீடு, ஹோட்டல் வைப்பதே அவரின் (இரண்டாம் மனைவி) விருப்பம். அவர் இரண்டு மாதங்கள் மட்டுமே என்னுடன் இருந்தார்” என கவலையுடன் கூறினார்.

இருப்பினும், வருகையாளர்கள் தான் எனக்கு எல்லாமே என்று கூறிய அவர், உழைப்புக்கு தனி இலக்கணத்தை உருவாக்கியது போல நம்மை உணர வைக்கிறார்.

Source: Mothership

சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூவின் 100வது பிறந்தநாள் நினைவு நாணயம்: வெளிநாட்டு ஊழியர்களும் பெற்றுக்கொள்ள ஏற்பாடு

நீரில் கண்டெடுக்கப்பட்ட இளைஞர் ஒருவரின் சடலம் – அருகில் இருந்த மது பாட்டில்கள் & ஸ்னாக்ஸ்.. விசாரணை