சிங்கப்பூரில் ப்ளூ சட்டை மாறனின் ‘ஆன்டி இண்டியன்’ படத்தை வெளியிடத் தடை!

Photo: Blue Sattai Maran Official Twitter Page

உலகில் பிரபல வலைத்தளங்களில் ஒன்றான யூடியூப் தளத்தின் (Youtube) மூலம் திரைப்படங்களை விமர்சனம் செய்து பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன். மேலும், தனது தனித்துவமான விமர்சனங்களால் ரசிகர்களிடம் பிரபலமானார்.. இவர் கடந்த 2019- ஆம் ஆண்டு தான் ஒரு படத்தை இயக்குவதாக அறிவித்தார்.

சிங்கப்பூரில் மேலும் 454 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி!

அதன் தொடர்ச்சியாக, ‘ஆன்டி இண்டியன்’ எனப் பெயரிடப்பட்ட அந்த படத்தின் நடிகர், கதை, திரைக்கதை, வசனம், இசை என அனைத்து பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்ட ப்ளூ சட்டை மாறனின் திரைப்படம் பல்வேறு தடைகளைத் தாண்டி வெற்றிகரமாக நேற்று (10/12/2021) இந்தியாவில் உள்ள திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் நரேன், ராதா ரவி உள்ளிட்டோருடன் இணைந்து நிறைய புதுமுகங்களும் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தை மூன் பிக்சர்ஸின் ஆதம் பாவா தயாரித்துள்ளார். முழுக்க முழுக்க அரசியலை மையப்படுத்தி இப்படமானது எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இப்படத்தின் சிறப்பு காட்சிகளைப் பார்த்த திரையுலக பிரபலங்கள், படம் சிறப்பாக வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

‘புலம்பெயர்ந்தோர் உலகத்தமிழர் நாள்’- பெருவிழாவில் பங்கேற்க விரும்புவோர் இணையதளத்தில் பதிவுச் செய்யலாம்!

இந்த நிலையில், ‘ஆன்டி இண்டியன்’ திரைப்படத்தை அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வெளியிட படக்குழு முயற்சி செய்த நிலையில், அமெரிக்காவில் மட்டும் படம் வெளியானது. இப்படத்திற்கு சென்சார் வழங்க மறுத்த சிங்கப்பூர் தணிக்கை வாரியம், சிங்கப்பூரில் இப்படத்தை வெளியிடத் தடை விதித்துள்ளது.

படத்தில் மதம் சார்ந்த சர்ச்சைக்குரிய கருத்துகள் இருப்பதால், படத்தை வெளியிடத் தடை விதித்திருப்பதாக சிங்கப்பூர் தணிக்கை வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

புலம்பெயர்ந்த தமிழர்களுக்கான தமிழ்நாடு அரசின் இணையதள சேவை தொடக்கம்!

இது குறித்து ப்ளூ சட்டை மாறன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “ஆன்டி இண்டியன் படத்திற்கு சிங்கப்பூரிலும் தடை. சிங்கப்பூரில் ஆன்டி இண்டியனைத் திரையிட முடிவு செய்திருந்தோம். ஆனால் படம் பார்த்த ‘Examine Committe’ மதம் சார்ந்த சர்ச்சைக்குரிய காட்சி மற்றும் வசனங்கள் படத்தில் இருப்பதால் சென்சார் வழங்க மறுத்துவிட்டது.

எனவே நாங்கள் மறுதணிக்கைக்கு மேல்முறையீடு செய்துள்ளோம். நாளையோ (10/12/2021) அல்லது நாளை மறுதினமோ (11/12/2021) மறுதணிக்கை செய்யப்பட்டு இப்படம் திரைக்கு வருமென நம்புகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.