சிங்கப்பூர் பொத்தோங் பாசிர் பிளாட்டுக்குள் சடலம் ஒன்று கண்டெடுப்பு..!

Body found at Potong Pasir flat during dengue inspections
Body found at Potong Pasir flat during dengue inspections (Photo: Mothership)

பொத்தோங் பாசிர் பிளாட்டுக்குள் வியாழக்கிழமை (ஜூலை 2) சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

டெங்கு பரிசோதனைகளை மேற்கொள்ள அதிகாரிகள் பிளாட்டுக்குள் கட்டாயமாக நுழைந்ததை அடுத்து இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் 4ஆம் கட்ட பட்டியல்..!

நேற்று வியாழக்கிழமை மாலை 4 மணியளவில், புளோக் 139 பொத்தோங் பாசிர் அவென்யூ 3இல் இயற்கைக்கு மாறான மரணம் தொடர்பான வழக்கு குறித்து தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நடந்து வருகின்றன.

பிளாட் உரிமையாளர் அல்லது குடியிருப்பாளரை தொடர்பு கொள்ள பல முறை முயற்சிகளை மேற்கொண்டது, ஆனால் இந்த முயற்சிகள் தோல்வியுற்றதன் காரணத்தினால், அதன் அதிகாரிகள் அவசர டெங்கு சோதனைகளை மேற்கொள்வதற்காக பிளாட்டிற்குள் நுழைந்ததாகக் தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் (NEA) தெரிவித்துள்ளது.

178 டெங்கு சம்பவங்கள் பதிவானதால், வீடுகளில் டெங்கிச் சோதனைகளை நடத்தி வருவதாக NEA தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 188 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      https://twitter.com/tamilmicsetsg
??Telegram  https://t.me/tamilmicsetsg
?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg