சாங்கி பாயின்ட் ஃபெர்ரி டெர்மினல் நீரில் இறந்து கிடந்த ஆடவர் – அருகில் செருப்பு, பீர் கேன் கண்டெடுப்பு

Body retrieved waters Changi Point Ferry Terminal
Police

சீனப் புத்தாண்டு வேளையில், சாங்கி பாயின்ட் ஃபெர்ரி டெர்மினலில் 57 வயது ஆடவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

சிங்கப்பூரின் கடல், துறைமுக ஆணையத்தின் ரோந்துக் கப்பல் மற்றும் SCDF கடல் மீட்புக் கப்பல் ஆகியவற்றை பயன்படுத்தி அவரை தேடும் பணி நடந்தது.

மீண்டும் மிக பிரம்மாண்டமான TOTO லாட்டரி குலுக்கல்.. முதல் பரிசு S$12 மில்லியன் – சிறப்பு இணையத்தளத்துடன்

இரவு வரை இந்த தேடுதல் தொடர்ந்து நடந்தது, சம்பவ இடத்தின் அருகே அவரது செருப்புகள் மற்றும் பீர் கேன்கள் காணப்பட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, மறுநாள் கண்டெடுக்கப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக உறுதி செய்து அறிவிக்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில் சதிச் செயல் ஏதும் நடந்ததாக சந்தேகிக்கவில்லை என்று போலீசார் கூறினர்.

மேலும் விசாரணைகள் நடந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Verified by MonsterInsights