கையில் ஆயுதத்துடன்.. போலீசுக்கு அடங்க மறுத்த ஆடவரை Taser துப்பாக்கியில் சுட்டிபிடித்த போலீஸ்!

Police officers taser man, 56, who allegedly charged at them with knife at Boon Lay
For illustration (Photo: Stuff)

காவல்துறை அதிகாரிகளை புறக்கணித்து, மற்றவரை தாக்கும் வகையில் கையில் கத்தி ஏந்தி இருந்ததாக சந்தேகிக்கப்படும் 56 வயதுடைய ஆடவரை taser துப்பாக்கி மூலம் சுட்டுப்பிடித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பூன் லே பிளேஸில், கையில் ஆயுதத்துடன் ஆடவர் ஒருவர் இருப்பதாக நேற்று வெள்ளிக்கிழமை (மே 20) போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

Work permit அனுமதி காலாவதி… “வேலை வேண்டும்” என்ற நோக்கில் கட்டுமான தளத்திற்குள் அத்துமீறி நுழைந்த வெளிநாட்டு ஊழியருக்கு சிறை

கையில் கத்தியுடன் இருந்த அந்த ஆடவர் அதனை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது, மேலும் போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டுப்பட மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

கைது

அதிகாரிகள் எடுத்துச்சொல்லியும் அவர்களை மதிக்காமலும், அவர்களின் அறிவுறுத்தல்களை புறக்கணித்ததாகவும் சிஎன்ஏ தெரிவித்துள்ளது.

இறுதியாக, அதிகாரிகளில் ஒருவர் அந்த ஆடவரை taser துப்பாக்கி மூலம் சுட்டார். இதையடுத்து போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

அதன் பின்னர் அவர் வைத்திருந்த கத்தியை அவர்கள் கைப்பற்றினர்.

விசாரணை

சந்தேகத்திற்கிடமான போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகள், மேலும் மற்றொரு மிரட்டல் குற்றத்திற்காகவும் அவர் விசாரிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளது.

பொது இடத்தில் மற்றவரை தாக்கும் வகையில் கையில் ஆயுதம் வைத்திருந்ததாக அவர் மீது இன்று (மே 21) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் மற்றும் குறைந்தபட்சம் ஆறு பிரம்படிகள் விதிக்கப்படலாம்.

ஊழியர் ஒருவரை அடித்து தாடையை உடைத்த இந்திய வம்சாவளி ஊழியருக்கு சிறை