Work permit அனுமதி காலாவதி… “வேலை வேண்டும்” என்ற நோக்கில் கட்டுமான தளத்திற்குள் அத்துமீறி நுழைந்த வெளிநாட்டு ஊழியருக்கு சிறை

migrant worker lost money scammed
Pic: AFP/Roslan Rahman

Work permit அனுமதி காலாவதியாகிவிட்ட நிலையில், கட்டுமானத் தளம் வழியாக ​​வேலை தேடி தளத்திற்குள் அத்துமீறி நுழைந்த வெளிநாட்டு ஊழியருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் கல்லாங் விமான நிலையக் கட்டிடத்தில் வேலி அமைக்கப்பட்ட தளத்திற்குள் அவர் அத்துமீறி ஊர்ந்து நுழைந்ததாக கூறப்படுகிறது.

ஊழியர் ஒருவரை அடித்து தாடையை உடைத்த இந்திய வம்சாவளி ஊழியருக்கு சிறை

டாங் ஹு ஜியாங் என்ற 28 வயதான வியட்நாம் ஊழியர், உள்ளே நுழைந்த பின்னர் அறை ஒன்றில் சிறுநீர் கழித்ததாகவும் சொல்லப்படுகிறது.

மேலும், போலீசிடம் புகார் அளிக்க கூடாது என்று தளத்தில் சீரமைப்பு பணிகளை மேற்பார்வையிடும் திட்ட மேலாளரை அவர் மிரட்டியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றொரு சம்பவத்தில், 7-11 கன்வீனியன்ஸ் கடையில் “ரெட் புல்” எனர்ஜி பானத்தை திருடிய குற்றச்சாட்டையும் அவர் ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில், தளத்திற்குள் அத்துமீறி நுழைந்து அச்சுறுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்ட டாங்கிற்கு இரண்டு வாரங்கள் மற்றும் மூன்று நாட்கள் சிறைத்தண்டனையும் S$1,000 அபராதமும் நேற்று வியாழன் (மே 19) அன்று விதிக்கப்பட்டது.

ஒருவரை தாக்கும்போது படம்பிடித்த மற்றொரு ஆடவரை தாக்கிய சிவகார்த்திக்குக்கு சிறை