வேற லெவல் அய்யா..! 80,000 பாட்டில் மூடிகளைப் பயன்படுத்தி “I love Singapore” தரை ஓவியம் – குவியும் பாராட்டுக்கள்

bottle-caps-mural 'I love S'pore'

ஓய்வு பெற்ற முதியவர் ஒருவர் 80,000 பாட்டில் மூடிகளைப் பயன்படுத்தி தரையில் “ஐ லவ் சிங்கப்பூர்” என்னும் அழகிய ஓவியத்தை உருவாக்கியுள்ளார்.

77 வயதான ஷென் மாஃபு (Shen Maofu) என்ற அவர் பெடோக்கில் இந்த சாதனையை நிகழ்த்தினார். இதனை முடிக்க 6 மாத காலம் ஆனதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு அங்கு வசிப்பவர்கள் சிறிய அளவில் உதவி செய்ததாகவும் அவர் சொன்னார்.

லிப்ட்டில் இருந்தபோது தீ… பரிதாபமாக உயிரிழந்த இளம் ஊழியர்

பிளாக் 25 நியூ அப்பர் சாங்கி சாலையில் உள்ள திறந்த வெளிப்பகுதியில் உருவாகியுள்ள அந்த ஓவிய படைப்பு 6மீ *4மீ அளவு கொண்டது, மேலும் கடந்த டிச. 25 அன்று அந்த பணி நிறைவடைந்தது.

ஒவ்வொரு நாளும் மதியம் 3 மணி முதல் இரவு 8 மணி வரை அந்த ஓவிய படைப்பை உருவாக்கியதாக ஷின் மின் டெய்லி நியூஸிடம் ஷென் கூறினார்.

மேலும் அவருக்கு இந்த யோசனை கடந்த மே மாதத்தில் தோன்றியது என்றும் குறிப்பிட்டார்.

இதற்காக வேண்டி ஒவ்வொரு நாளும் மொத்தம் 20 முதல் 30 பாட்டில் மூடிகளை அவர் சேகரிப்பார், ஆனால் அது போதுமானதாக அமையவில்லை என்றும் அவர் கூறினார்.

மொத்தத்தில், சிமெண்ட் மற்றும் போக்குவரத்திற்காக மட்டும் கிட்டத்தட்ட S$700 முதல் S$800 வரை செலவிட்டதாகவும் ஷென் மதிப்பிட்டுள்ளார்.

வேலையிடத்தில் மேலும் ஒரு ஊழியர் மரணம்: இயந்திரம் விழுந்து விபத்து – யார் அவர்?