பயணிகள் மழையில் நனைய கூடாது என குடை பிடித்த இளையர் – குவியும் பாராட்டு

பயணிகள் மழையில் நனைய கூடாது
@baebe22paches/TikTok

யிஷூனில் இளையர் ஒருவரின் செயல் மழைநாளிலும் மிக பிரகாசமாக இருந்தது.

பேருந்தில் இருந்து இறங்கும் பயணிகள் மழையில் நனைய கூடாது என்பதற்காக அவர் குடை பிடித்தது வைரலாகி வருகிறது.

இந்திய ஊழியருக்கு சிறை, பிரம்படி.. இளம்பெண்ணை காட்டுக்குள் இழுத்துச்சென்று நாசம் செய்த ஊழியர்

பேருந்து நிறுத்தத்தில் நின்ற அந்த இளையர், இறங்கும் பயணிகள் கூடாரத்தை அடையும் வரை அவர்களுக்கு குடை பிடித்துள்ளார்.

கடந்த அக். 20 அன்று அவரது பொதுநல செயல் வீடியோவாக எடுக்கப்பட்டு TikTok இல் பதிவேற்றப்பட்டது.

பேருந்தில் இருந்து இறங்கிய பெரும்பாலான பயணிகள் இளையருக்கு “நன்றி” என்று முணுமுணுத்தது போல் வீடியோவில் தெரிகிறது.

அந்தக் காட்சியைப் படமாக்கிய ஆடவர் கூறுகையில், இளையர் தான் ஏற வேண்டிய பேருந்தை கிட்டத்தட்ட தவறவிட்டு உதவி செய்ததாக கூறினார்.

வீடியோ வைரலானதும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு இனி கப்பலில் வரலாம் – கட்டணம் எவ்ளோ?