நடைபாதையில் தவறி விழுந்த இரண்டு வயது சிறுவனுக்கு 24 தையல்

Toddler, 2, falls on Sengkang pavement with cracked tiles, gets 24 stitches on forehead
Shin Min Daily News

Fernvale இணைப்பு அருகே நடைபாதையில் விழுந்த இரண்டு வயது சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

நடைபாதையின் கூர்மையான பகுதிகள் குழந்தையின் நெற்றியில் தாக்கியதால் காயம் பெரிய அளவில் ஏற்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.

பரமக்குடி ஊழியர் திருமணத்துக்கு வந்த சிங்கப்பூர் முதலாளி: “தமிழ் கலாச்சாரம், உபசரிப்பு வியப்பாக உள்ளது” என பெருமிதம்

பிளாக் 417A Fernvale இணைப்புக்கு அருகில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு அந்த சிறுவன் சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

அதாவது அந்த சிறுவனுக்கு சுமார் 2 சென்டி மீட்டர் அளவுக்கு நெற்றியில் வெட்டு ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

அதனை சரிசெய்ய சுமார் 24 தையல்கள் போட வேண்டியிருந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த மே 31, அன்று பிற்பகலில் நடந்ததாக பிள்ளையின் தாயார் கூறினார்.

வீட்டின் பணிப்பெண் தனது மகனை விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், சிறுது நேரத்திலேயே காயத்துடன் வீடு திரும்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

40 நிமிடம் நடந்த இந்த சிகிச்சைக்கு சுமார் S$8,400 செலவானதாகவும் தாயார் கூறியுள்ளார்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

சிங்கப்பூரில் வேலை: அதிக அளவில் வேலைக்கு ஆட்களை எடுக்கும் நிறுவனம்