பரமக்குடி ஊழியர் திருமணத்துக்கு வந்த சிங்கப்பூர் முதலாளி: “தமிழ் கலாச்சாரம், உபசரிப்பு வியப்பாக உள்ளது” என பெருமிதம்

singapore-boss-came-ramanathapuram-worker-marriage

தமிழ் ஊழியரின் திருமணத்தை நடத்திவைக்க சிங்கப்பூர் முதலாளி தமிழ்நாட்டுக்கு வருகை தந்து சிறப்பித்த சம்பவம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

இராமநாதபுரம் மாவட்டத்தின் பரமக்குடி பகுதிக்கு அருகே அமைந்துள்ள செய்களத்தூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஊழியர் கலைவாணன்.

சிங்கப்பூரில் வேலை: அதிக அளவில் வேலைக்கு ஆட்களை எடுக்கும் நிறுவனம்

கலைவாணன் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் சிங்கப்பூரில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், அவருக்கு ஆனந்தவல்லி என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கடந்த வாரம் திருமணம் நடந்தது.

தனது “திருமணத்துக்கு நீங்க வந்தே ஆகணும்” என்று கலைவாணன் தனது முதலாளி ஸ்டீபன் லீ குவான்க்கு அழைப்பு விடுத்தது இருந்தார்.

ஊழியரின் பாசமான அழைப்பை ஏற்றுக்கொண்ட முதலாளி, கடந்த வாரம் நடந்த திருமணத்தில் கலந்துகொண்டு, தம்பதிக்கு திருமாங்கல்யத்தை தன் கையால் எடுத்துக்கொடுத்து வாழ்த்தினார்.

முன்னதாக அவரை வரவேற்க தாரைதப்பட்டைகள், வாணவேடிக்கைகள் பறக்க, மாலை அணிவித்தும் மற்றும் பொன்னாடை போர்த்தியும் தமிழர் கலாச்சார நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனை நேரடியாக கண்ட முதலாளி, “தமிழ் மக்களின் கலாச்சார உபசரிப்பை நேரில் இதுவரை பார்த்ததில்லை, இது வித்தியாசமாகவும் வியப்பாகவும் உள்ளது” என்றார்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள் 

தொழிலாளியின் திருமணத்துக்காக சிங்கப்பூரில் இருந்து புதுக்கோட்டைக்கு வந்த முதலாளி!

நீண்ட நாட்கள் தங்கி சிங்கப்பூரில் வேலை செய்ய போலி ஆவணங்களை சமர்ப்பித்த வெளிநாட்டவருக்கு சிறை