நீண்ட நாட்கள் தங்கி சிங்கப்பூரில் வேலை செய்ய போலி ஆவணங்களை சமர்ப்பித்த வெளிநாட்டவருக்கு சிறை

work pass holder forged documents extend stay
(PHOTO: Today)

போலி ஆவணங்களை வைத்து சிங்கப்பூரில் அதிக நாட்கள் தங்குவதற்கு பிளான் போட்ட வெளிநாட்டு நபருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மகேந்திரன் முனியாண்டி என்ற 34 வயதுமிக்க அவர் NUS துணைப்பாட கட்டண சலுகை பெற்று சிங்கப்பூருக்கு வந்துள்ளார். அதாவது கடந்த 2008 ஆம் ஆண்டு அவர் படிக்க இங்கு வந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

ஜூன் 1 முதல் கடும் நடவடிக்கை – முதல்நாளே சிக்கிய நபர்

துணைப்பாட கட்டண சலுகை பெற்றதால், சிங்கப்பூரில் மூன்று ஆண்டுகள் அவர் வேலை செய்ய வேண்டும். 2014 முதல் 2017 வரை அவர் சிங்கப்பூரில் வேலை செய்துள்ளார்.

இ-பாஸ் அனுமதி

அதன் பின்னர் 2017 ஆகஸ்ட் 18, அன்று அவரின் இ-பாஸ் அனுமதி அட்டையும் காலாவதியானது.

அதன் பிறகு, 1 வருடத்திற்கான நீண்ட கால அனுமதி கேட்டு மகேந்திரன் விண்ணப்பித்தார், அதற்கு அனுமதியும் வழங்கப்பட்டது.

ICA பதிவுகளின் அடிப்படையில், ஆகஸ்ட் 2017 இல் அவருக்கு நீண்ட கால அனுமதி வழங்கப்பட்டது, பின்னர் ஒரு வருடம் கழித்து அதுவும் காலாவதியானது.

போலியான ஆவணங்கள் சமர்ப்பிப்பு

மூன்று ஆண்டுகள் தாம் வேலை செய்யவில்லை என்று போலியான ஆவணங்களை சமர்ப்பித்து, மீண்டும் நீண்ட கால அனுமதிக்கு அவர் விண்ணப்பித்துள்ளார்.

அவர் சமர்ப்பித்த ஆவணங்கள் போலியானவை என கண்டறிந்த அதிகாரிகள் போலீசிடம் புகார் செய்தனர். அதன் பின்னர் அவர் பிடிபட்டார்.

இதனை அடுத்து மகேந்திரன் முனியாண்டிக்கு, நேற்று முன்தினம் (ஜூன் 1) 20 வாரங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள் 

ரொனால்டோ சிங்கப்பூர் வருகை – ரசிகர்கள் ஆரவாரம்